'இந்தியன் 2', 'விக்ரம்' படங்களுக்கு முன் ஒரு கமல் படம்?

'இந்தியன் 2', 'விக்ரம்' படங்களுக்கு முன் ஒரு கமல் படம்?

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் தற்போது ’இந்தியன் 2’ என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்றும் விரைவில் அவர் நடிக்க உள்ள ’விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ’இந்தியன் 2’ மற்றும் ’விக்ரம்’ ஆகிய இரண்டு படங்களுக்கும் முன்பாக குறுகிய காலத்தில் ஒரு படத்தை முடிக்க கமல்ஹாசன் திட்டமிட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கிய ’த்ரிஷ்யம்’ படத்தின் தமிழ் ரீமேக்கான ’பாபநாசம்’ திரைப்படத்தில் கமல்ஹாசன் நடித்து இருந்தார் என்பதும் இந்த படம் ரூபாய் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சக்கைபோடு போட்டது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் வெளியான ’த்ரிஷ்யம் 2’ படத்தின் ரீமேக்கில் கமல் நடிக்கவிருப்பதாகவும் ஒரே மாதத்தில் இந்த படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு அதன் பின் ’இந்தியன் 2’ மற்றும் ’விக்ரம்’ படப்பிடிப்புகளை தொடங்கலாம் என்று கமல் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

’பாபநாசம் 2’ படத்தின் படம் குறித்து கமல்ஹாசனிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் ’பாபநாசம்’ முதல் கமல் ஜோடியாக கௌதமி நடித்த நிலையில் இரண்டாம் பாகத்தில் அவர் நடிப்பாரா என்ற கேள்வியும் ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES