முழுவதும் சர்ச்சை காட்சிகள்! கைமீறிச்சென்ற புளூசட்டை மாறனின் ஆன்டி இண்டியன்!

முழுவதும் சர்ச்சை காட்சிகள்! கைமீறிச்சென்ற புளூசட்டை மாறனின் ஆன்டி இண்டியன்!

சினிமாத்துறையில் ஒரு படம் எப்படி இருக்கிறது என்று கூறுவதற்கு ஊடகங்கள் பெரிய பங்கு வகிக்கிறது. அதில் படத்தினை பார்த்து விமர்சனத்தை வெளியிடுவார்கள். ஆனால் தற்போது சமுகவலைத்தளத்தில் பலர் யுடியூப் சேனல் மூலம் விமர்சித்து வருகிறார்கள். அப்படி சர்ச்சை விமர்சனத்தால் நெட்டிசன்கள் மத்தியில் பிரபலமானவர் புளூ சட்டை மாறன்.

அவர் நடத்தி வரும் யுடியூப் சேனலில் அனைத்துவித நடிகர், இயக்குநர்கள் படத்தினை தனக்கு எப்படி தோணுகிறது அப்படியாகவே விமர்சனம் செய்வார். அந்தவகையில், மாறன் ஆண்டி இண்டியன் என்ற படத்தினை இயக்கியுள்ளார். பல ஆண்டுகளாக இயக்கி வந்த இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் வீடியோவை வெளியிட்டார்.

படத்தினை தணிக்கை குழுவினரிடம் கொண்டு சென்ற போது 30க்கும் மேற்பட்ட குறைகளை கூறி படத்தினை வெளியிடமுடியாது என்று சர்ட்டிஃபிகேட் கொடுத்துள்ளனர். ஆனால், இதைமீறியும் பெங்களூர் சென்ற மாறன் அதேபோல் முதலில் தலைப்பை மாற்றுங்கள்,

உள்ளே இருக்கும் கட்சிகளின் பேர், நடிகர் நடிகைகளை இழிவுபடுத்துதள் உள்ளிட்ட அதே 30க்கும் மேற்பட்ட காட்சிகளை நீக்க வேண்டும் என்று கூறி அனுப்பியுள்ளனர். இதையும் மீறி மாறன் ஓடிடி தளத்தில் வெளியிடுங்கள் என்று நெட்டிசன்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES