தனுஷுடன் ஏற்பட்ட மோதல் - வெளிப்படையாக பேசிய தயாரிப்பாளர் சசிகாந்த் -
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படம் வரும் ஜூன் 18ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியவிருக்கிறது.
இதற்கான ப்ரோமோஷன் பணிகளில் தற்போது அப்படத்தின் தயாரிப்பாளர் சசிகாந்த் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில், ஜகமே தந்திரம் படத்தின் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ள தயாரிப்பாளர் சசிகாந்திடம், தனுஷுடனான மோதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதுகுறித்து அவர் கூறியதாவது:
நானும் தனுஷும் 10 ஆண்டுகளாக நண்பர்களாக இருக்கிறோம் என்ற விஷயம் பலருக்கும் தெரியாது. இந்த பட விவகாரத்தில் எங்களுக்கிடையே ஒரு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தனுஷும் இந்த படத்தின் நல்லதுக்குத்தான் பேசினார். '
ஜகமே தந்திரம்' தியேட்டரில் ரிலீசானால் நன்றாக இருக்கும் என்று அவர் சொன்னது சரியான கருத்து தான். ஆனால், கமர்ஷியல் ரீதியாக கடந்த ஓராண்டாக, இத்தகைய பெரிய பட்ஜெட் படத்தை வைத்து கொண்டிருப்பது, எவ்வளவு வட்டி என்பது எனக்கு தான் தெரியும்.
இது தொடர்பாக நிறைய பிரச்சனைகள் இருக்கின்றன. தற்போது இந்த படம் உலகளவில் வெளியாகவுள்ளது. இப்படம் குறித்து அமெரிக்காவில் எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு தயாரிப்பாளராக அது எனக்கு சந்தோஷத்தை தருகிறது”. என்று சசிகாந்த் கூறியுள்ளார்.