இளையராஜாவுக்கு தனது படத்தை போட்டு காட்ட முடிவு செய்த விஷால்!

இளையராஜாவுக்கு தனது படத்தை போட்டு காட்ட முடிவு செய்த விஷால்!

நடிகர் விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த வெற்றி திரைப்படம் ’துப்பறிவாளன்’. இந்த படத்தின் அடுத்த பாகமான ’துப்பறிவாளன் 2’ படத்தின் படப்பிடிப்பு 2019ஆம் ஆண்டு தொடங்கியது. இங்கிலாந்து உள்பட ஒருசில நாடுகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்த நிலையில் திடீரென விஷால் மற்றும் மிஷ்கின் ஆகியோர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் மிஸ்கின் இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாகவும், விஷாலே இந்த படத்தின் மீதி பகுதியை இயக்க இருப்பதாகவும் விஷால் இயக்கும் முதல் படம் இதுதான் என்று செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் ‘துப்பறிவாளன் 2’ படத்திற்கு இசையமைத்து வரும் இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டதை அடுத்து விஷால் ஒரு டுவிட்டை பதிவு செய்திருந்தர். அதில் ’துப்பறிவாளன் 2’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் படப்பிடிப்பு முடிவடைந்ததும் இந்த படத்தை இசையமைப்பாளர் இளையராஜா அவர்களிடம் போட்டு காண்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும், இசைஞானிக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும் பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து ’துப்பறிவாளன் 2’ திரைப்படத்தின் அடுத்த கட்ட பணிகள் விரைவில் தொடங்கும் என தெரிகிறது.

LATEST News

Trending News