அஜித்தின் கேரக்டர், கெட்டப் இதுதான்: அப்டேட் தந்த 'வலிமை' படத்தில் நடித்த நடிகை!
’வலிமை’ படத்தில் அஜீத் நடித்த கேரக்டர் மற்றும் கெட்டப் குறித்த தகவலை அந்த படத்தில் நடித்த நடிகை ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் லைவ்வில் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’வலிமை’. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார் என்பதும் போனிகபூர் தயாரித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ’வலிமை’ என்ற டைட்டிலை தவிர இதுவரை படக்குழுவினர் எந்தவொரு அப்டேட்டையும் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை என்பதும் இந்த படம் குறித்து வெளிவந்து கொண்டிருக்கும் தகவல் அனைத்துமே படக்குழுவினர்கள் மற்றும் ரசிகர்களிடம் இருந்து கசிந்து வரும் தகவல்கள்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’வலிமை’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வரும் சங்கீதா என்ற நடிகை தனது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் உரையாடியபோது ’வலிமை’ படத்தில் அஜித்தின் கேரக்டர் குறித்து கூறியுள்ளார். அஜித் இதற்கு முன் நடித்திராத கேரக்டரில் இந்த படத்தில் நடித்து உள்ளதாகவும், 10 முதல் 15 வயது வரை அவர் வயது குறைந்து காணப்படுவார் என்றும் அந்த அளவுக்கு அவர் இந்த படத்தில் ஸ்மார்ட்டாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் ’வலிமை’ படத்திற்காக கடுமையாக உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை அஜித் குறைந்துள்ளதாகவும் இந்த படம் நிச்சயம் தல அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருப்பத்துக்குரிய படமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். ’வலிமை’ படத்தின் அஜித்தின் கெட்டப் மற்றும் கேரக்டர் குறித்த அப்டேட்டை நடிகை சங்கீதா கூறிய நிலையில் இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.