ஜகமே தந்திரம் படத்தின் கதை இது தானா? கடும் சோகத்தில் ரசிகர்கள்..

ஜகமே தந்திரம் படத்தின் கதை இது தானா? கடும் சோகத்தில் ரசிகர்கள்..

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் தான் ஜகமே தந்திரம்.

இப்படம் வரும் ஜூன் 18 ஆம் தேதி பிரபல OTT தளமான Netfilx-ல் நேரடியாக வெளியாகவுள்ளாரது.

இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு வெளியான ஜகமே தந்திரம் படத்தின் ட்ரைலர் அணைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து ட்ரெண்டாகி வருகிறது.

மேலும் தற்போது ஜகமே தந்திரம் டிரைலர் பக்கத்தில் படத்தின் கதைக்களத்தையும் வெளியிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த ரவுடி சுருளி. லண்டன் நிழலுலகில் ஆயுதக் கடத்தல், தங்க வியாபாரம் ஆகியவற்றில் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் சிவதாஸ்  கூட்டத்தில் ஊடுருவ, அவர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள, லண்டனில் அரசியல்வாதிகளோடு கூட்டு வைத்திருக்கும் பெரிய தாதா பீட்டர் என்பவனால் சுருளி வேலைக்கு எடுக்கப்படுகிறான்.

  மூன்று வெவ்வேறு கதாபாத்திரங்களின் பார்வையில், அவர்கள் வீடு என்று நினைக்கும் இடத்தை தக்கவைத்துக் கொள்வதற்கான போராட்டமே இந்தப் படம் இவ்வாறு அதில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இவ்வளவு மாஸ்ஸாக இருக்கும் இந்த படத்தை திரையரங்கில் காண முடியாததால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES