பிக் பாஸ் நடிகர் கவினின் லிப்ட் திரைப்படம் ஓடிடியில் வெளியாகிறதா - படக்குழு விளக்கம்

பிக் பாஸ் நடிகர் கவினின் லிப்ட் திரைப்படம் ஓடிடியில் வெளியாகிறதா - படக்குழு விளக்கம்

பிக் பாஸ் சீசன் 3 மூலம் தனக்கென்று ரசிகர்கள் பட்டாளத்தை அமைத்துக்கொண்டவர் நடிகர் கவின்.

இவர் தற்போது லிப்ட் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பிகில் படத்தில் நடித்த, நடிகை அமிர்தா கதாநாயகியாக நடித்துள்ளார்.

இப்படத்தின் முதல் பாடல் சிவகார்த்திகேயனின் குரலில் பாடி சில வாரங்களுக்கு முன் வெளியாகி சிறந்த வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் கவின் நடித்துள்ளது லிப்ட் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளாதாக தகவல் கூறப்படுகிறது.

இது குறித்து அப்படத்தின் குழு விளக்கமளித்துள்ளது. இதில் " லிப்ட் படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகவுள்ளது.

ஜூன் 20ஆம் தேதிக்கு மேல் சூழ்நிலையை பார்த்துவிட்டு, தியேட்டரில் வெளியிட கூடிய சூழல் இல்லை என்றால் மட்டுமே ஓடிடியில் இப்படம் வெளியாகும். ஆனால், 'லிப்ட்' தியேட்டருக்கான படம் தான் ” என்று படக்குழு தெரிவித்துள்ளனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES