கவின் நடித்த 'லிப்ட்' ஓடிடியில் ரிலீஸா? தயாரிப்பாளர் விளக்கம்!

கவின் நடித்த 'லிப்ட்' ஓடிடியில் ரிலீஸா? தயாரிப்பாளர் விளக்கம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய புகழடைந்த கவின் மற்றும் ’பிகில்’ படத்தில் நடித்த அம்ரிதா ஐயர் ஆகிய இருவரும் முதன் முதலாக இணைந்து நடித்த திரைப்படம் ’லிப்ட்’. ஐடி அலுவலகம் ஒன்றில் நடக்கும் திரில்லான சம்பவத்தின் அடிப்படையில் இந்த படத்தின் கதை அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு மார்ச் மாதமே முடிந்து விட்டது என்பதும் இந்த படத்தின் போஸ்ட் புரடக்ஷன் பணிகளும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்றும் கூறப்படுகிறது. இந்த படம் தற்போது ரிலீசுக்கு தயாராக இருந்தபோதிலும் திரையரங்குகள் திறக்கப்படாததால் திரை அரங்குகள் திறந்த பிறகு ரிலீஸ் செய்யலாம் என்று படக்குழுவினர் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் லிப்ரா புரொடக்ஷன் ரவீந்தர் அவர்கள் பேட்டி ஒன்றில் பேசிய போது ’ஜூன் மாதம் வரை திரையரங்குகள் திறப்பதற்காக காத்திருப்போம் என்றும் அதன்பிறகு ஓடிடியில் வெளியிட முயற்சி செய்வோம் என்றும் கூறியுள்ளார். எனவே விரைவில் திரை அரங்கில் அல்லது ஓடிடியில் இந்த படம் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. பிரிட்டோ இசையில் உருவாக்கிய இந்த படத்தை அறிமுக இயக்குனர் வினித் என்பவர் இயக்கியுள்ளார்.

LATEST News

Trending News