விஜய்யின் 2 படங்களில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்த கேப்ரியலா- எந்தெந்த படங்கள் தெரியுமா?

விஜய்யின் 2 படங்களில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்த கேப்ரியலா- எந்தெந்த படங்கள் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் நிறைய புதிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி மக்களிடம் பெரிய வரவேற்பு பெற்றன.

அப்படி புதிதாக தொடங்கப்பட்ட நிகழ்ச்சிகளிவ் ஒன்று ஜோடி, ஜோடி நம்பர் 1 நடன நிகழ்ச்சிகள்.

இந்த ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் பங்குபெற்றதன் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு பரீட்சயமானவரானார் கேப்ரியலா. நடன நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்குபெற்று வந்த கேப்ரியலா 7 சி என்கிற சீரியலிலும் நடித்திருந்தார்.

அதன்பிறகு படங்களில் வாய்ப்பு கிடைக்க சில படங்கள் நடித்தார். அண்மையில் பிக்பாஸ் 4வது சீசனில் கலந்துகொண்டு மக்களின் ஆதரவை பெற்றார்.

கேப்ரியலா இதுவரையிலான தனது பயணம் குறித்து ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் அவர் தான் இதுவரை விஜய்யின் பிகில் மற்றும் மாஸ்டர் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்ததாக கூறியுள்ளார்.

ஆனால் எதனால் இப்படங்களில் நடிக்கவில்லை என்று கூறவில்லை. 

LATEST News

Trending News

HOT GALLERIES