விஜய் ஆண்டனி பட நாயகியின் பிகினி புகைப்படங்கள்: இணையத்தில் வைரல்!

விஜய் ஆண்டனி பட நாயகியின் பிகினி புகைப்படங்கள்: இணையத்தில் வைரல்!

விஜய் ஆண்டனி படத்தில் நடித்த நாயகி ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி புகைப்படங்களை பதிவு செய்துள்ளதை அடுத்து அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. விஜய் ஆண்டனி நடிப்பில் ஆனந்த் என்பவர் இயக்கிய திரைப்படம் ’இந்தியா-பாகிஸ்தான்’. இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக சுஷ்மா ராஜ் என்பவர் நடித்து இருந்தனர். இந்த படத்தில் இவருக்கு நல்ல பெயர் கிடைத்தாலும் தமிழில் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கணேஷ் வெங்கட்ராமன், த்ரிஷா நடித்த ’நாயகி’ என்ற படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் இவர் நடித்து இருந்தார் என்பதும் அதன் பின்னர் தெலுங்கு மற்றும் கன்னட படங்கள் நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் சுஷ்மாராஜ் சற்றுமுன்னர் பிகினி உடையில் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். நீச்சல் குளத்தில் படு ஜாலியாக சுஷ்மாராஜ் உட்கார்ந்து இருக்கும் இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News