கமலுக்கு வில்லாக நடிக்கும் முன்னணி நடிகர் - எதிர்பார்ப்பில் காத்திருக்கும் ரசிகர்கள்

கமலுக்கு வில்லாக நடிக்கும் முன்னணி நடிகர் - எதிர்பார்ப்பில் காத்திருக்கும் ரசிகர்கள்

மாஸ்டர் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் விக்ரம்.

இதில் கதாநாயகனாக உலகநாயகன் கமல் ஹாசன் நடித்து வருகிறார். இது கமலின் 232வது படமாகும். கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.

இப்படத்தில் வில்லனாக பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், இப்படத்தில் கமலுக்கு மற்றொரு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளதாவும் கோலிவுட் வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.

நடிகர் விஜய் சேதுபதி ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘மாஸ்டர்’ படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

LATEST News

Trending News

HOT GALLERIES