இயக்குனர் பாலாவின் படத்தில் விஜய் சேதுபதி பதிலாக நடிக்கும் முக்கிய நடிகர், எந்த திரைப்படம் தெரியுமா?

இயக்குனர் பாலாவின் படத்தில் விஜய் சேதுபதி பதிலாக நடிக்கும் முக்கிய நடிகர், எந்த திரைப்படம் தெரியுமா?

மலையாளத்தில் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற ‘ஜோசப்’ திரைப்படம் தமிழில்  ‘விசித்திரன்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. 

இப்படத்தை பிரபல இயக்குநர் பாலா தனது பி ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். ‘ஜோசப்’ படத்தை இயக்கிய பத்மகுமார் தான் தமிழில் ரீமேக்கான விசித்திரனையும் இயக்கி உள்ளார்.

இப்படத்தில் ஆர்.கே. சுரேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். ஹீரோயினாக பூர்ணா, மதுஷாலினி ஆகியோர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 

இந்நிலையில் இப்படம் குறித்து சமீபத்திய பேட்டியில் பேசிய நடிகர் ஆர்.கே.சுரேஷ், முதலில் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க விஜய் சேதுபதி, மாதவன் ஆகியோரின் பெயர்கள் தான் பரிசீலனையில் இருந்ததாகவும், இயக்குனர் பாலா தான் தன்னை பரிந்துரைத்ததாகவும் அவர் கூறி உள்ளார்.

மேலும் இப்படத்தின் வெளியீடு திரையரங்கிலா அல்லது ஓடிடியிலா என்பதை தயாரிப்பாளர் பாலா தான் முடிவு செய்வார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.    

LATEST News

Trending News

HOT GALLERIES