Oxygen பெறுவதற்காக சோனு சூத் எடுத்த பெரிய முயற்சி- வியந்து பாராட்டும் மக்கள்
நடிகர் சோனு சூத் தமிழக மக்கள் இவரை ஒரு வில்லனாக தான் இதுவரை பார்த்தார்கள். ஆனால் அவரோ நிஜத்தில் பெரிய ஹீரோவாக மக்களுக்கு இருந்து வருகிறார்.
கொரோனா பிரச்சனை ஆரம்பித்ததில் இருந்து அவர் என்னென்ன உதவிகள் செய்து வருகிறார் என்பதை நாம் பார்த்து வருகிறோம்.
இப்போது மக்களுக்கு தேவைப்படும் ஆக்சிஜனை வழங்கி பெரிய உதவி செய்து வருகிறார். தற்போது அவர் பிரான்ஸ் மற்றும் பல வெளிநாடுகளில் இருந்து Oxygen Plants இந்தியா வரவைக்க இருக்கிறார்.
சில மாநிலங்களுக்கு கொடுத்து கஷ்டப்படுபவர்களுக்கு உதவ வழி செய்துள்ளார்.
இதனை தெரிந்துகொணட மக்கள் சோனு சூத்தை மனதார பாராட்டி வருகிறார்கள்.