"அதிர்ச்சியா இருக்கு!".. பத்திரிகையாளர் & நடிகரின் மரணம் பற்றி நானி, விஜய் தேவரகொண்டா!
தும்மல நரசிம்ம ரெட்டி எனும் டிஎன்ஆர் என்பவர் தெலுங்கில் பிரபல பத்திரிகையாளராகவும், யூடியூப் சேனலின் ஆங்கராகவும், திரைப்படங்களில் பிரபல குணச்சித்திர நடிகராகவும் புகழ்பெற்றவர்.
இவர் தான் தற்போது கொரோனா தொடர்பான பிரச்சனையால் மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவை அடுத்து திரைத்துறை பிரபலங்களும் பிரபல பத்திரிகையாளர்களும், திரைப்பிரபலங்களும் தொடர்ச்சியாக இரங்கல் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
Shocked to hear that TNR gaaru passed away .. have seen few of his interviews and he was the best when it came to his research and ability to get his guests to speak their heart out . Condolences and strength to the family 🙏🏼
— Nani (@NameisNani) May 10, 2021
குறிப்பாக பிரபல தெலுங்கு ஹீரோவான நானி மற்றும் தெலுங்கு இளம் ஹீரோ விஜய் தேவரகொண்டா உள்ளிட்டோர் டிஎன்ஆர் மறைவு குறித்த தங்களது இரங்கல்களை தெரிவித்து பதிவுகளை வெளியிட்டுள்ளனர். இதில் நானி கூறும்போது, “டி.என்.ஆர் காரு காலமானார் என்பதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன் .. அவரது சில நேர்காணல்களைப் பார்த்திருக்கிறேன், ஆராய்ச்சியிலும் மற்றும் தன் விருந்தினர்களை இதயம் திறந்து பேசவைக்கும் அவரது திறமையிலும் அவர் மிகச் சிறந்தவர். அவரது குடும்பத்திற்கு இரங்கலும், உறுதியுடன் இருக்குமாறு ஆறுதலும்” என குறிப்பிட்டுள்ளார்.
விஜய் தேவரகொண்டா தமது பதிவில், “அன்பான உங்களை நினைத்து, நமது இரண்டு நீண்ட உரையாடல்கள், உங்கள் உண்மையான ஆர்வம், அன்பு மற்றும் பொறுமை ஆகியவற்றை நினைவில் வைத்துக் கொள்கிறேன். நீங்கள் காலமான செய்தி வீட்டில் இருந்த அனைவரையும் உலுக்கியது, உங்களை மிஸ் பண்ணுகிறோம் TNR ஐயா .. என் மரியாதை மற்றும் அன்பு ..” எனபதிவிட்டுள்ளார்.Thinking of you fondly, remembering our two long conversations, your genuine interest, love and patience..
— Vijay Deverakonda (@TheDeverakonda) May 10, 2021
Your passing away has left all of us at home shaken, you will be missed TNR sir..
My respects and love.. pic.twitter.com/DQqzhGnhAc