தமிழில் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படம் தயாராகி வருவது நமக்கு தெரிந்த விஷயம் தான்.
தமிழில் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படம் தயாராகி வருவது நமக்கு தெரிந்த விஷயம் தான்.
ஆனால் படத்தின் படப்பிடிப்பு கொரோனாவால் நிறுத்தி வைக்கப்பட பின் தொடங்கவே இல்லை. இடையில் படம் டிராப் என்றெல்லாம் கூறப்பட்டது, ஆனால் படம் 60 % முடிந்துள்ள நிலையில் அதற்கு வாய்ப்பு இல்லை என்கின்றனர்.
இந்த நிலையில் ஷங்கர் இயக்கப்போகும் புதிய படம் குறித்து தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. அதாவது ஒரு பிரம்மாண்ட படத்தை அவர் இயக்க இருக்கிறாராம்.
2022ல் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது, அதில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என மற்ற மொழி நடிகர்களும் நடிக்க இருக்கிறார்களாம்.
இப்போதைக்கு கன்னட நடிகர் யஷ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.