சீரியலில் நடிக்கவந்த சூப்பர் சிங்கர் புகழ் மூக்குத்தி முருகன்- என்ன மாஸ் எண்ட்ரீ பாருங்க

சீரியலில் நடிக்கவந்த சூப்பர் சிங்கர் புகழ் மூக்குத்தி முருகன்- என்ன மாஸ் எண்ட்ரீ பாருங்க

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஹிட் ஷோக்களில் ஒன்று சூப்பர் சிங்கர். பாடல் போட்டியான இது நிறைய சீசன்கள் வந்துள்ளது.

ஜெயிப்பது ஒருவர் மட்டுமே என்றாலும் இதில் திறமையை வெளிக்காட்டிய அனைவருக்குமே சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்கின்றன. தற்போது முன்னணி பாடகர்களாகவே வளர்ந்து விட்டார்கள்.

அப்படி பெரியவர்களுக்காக நடந்த சூப்பர் சிங்கர் 7வது சீசனில் கலந்துகொண்டு கலக்கியவர் மூக்குத்தி முருகன். இந்த சீசனை இவர் தான் வெற்றிப்பெற்றார், விருதை இசையமைப்பாளர் அனிருத் கையால் பெற்றார்.

அவ்வப்போது பாடல் துறையில் கலக்கிவந்த மூக்குத்தி முருகன் முதன்முறையாக சீரியல் ஒன்றில் என்ட்ரீ கொடுத்துள்ளார்.

அதாவது ஈரமான ரோஜாவே சீரியலில் மலர் வளைகாப்பு நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் பாடுவதற்காக மூக்குத்தி முருகன் ஸ்பெஷல் விருந்தினராக கலந்துகொண்டிருக்கிறார் என தெரிகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES