கமலால் கடுப்பான இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விக்ரம் படத்திற்கு வந்த புதிய சிக்கல்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இதுவரை மாநகரம், கைதி, மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த மூன்று திரைப்படங்களும் பெரிய வெற்றியடைந்துள்ளது.
மேலும் இப்படங்களின் மூலம் தற்போது லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராகியுள்ளார்.
இந்நிலையில் இவர் அடுத்ததாக உலகநாயகன் கமலை விக்ரம் படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தின் கதையில் கமல் ஐந்து திருத்தங்களை லோகேஷிடம் கூறினாராம்.
தேர்தலுக்கு பின்னர் மீண்டும் கமலை சந்தித்த லோகேஷிடம் கதையில் மேலும் திருத்தங்களை கூறியுள்ளாராம் கமல். இதனால் லோகேஷ் ஊருக்கு கிளம்பி சென்றுவிட்டு மொத்தமாக கதை திருத்தும் செய்வதாக கூறியுள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது.