மறைந்த நடிகர் விவேக் அவர்களின் குடும்பத்தை சந்தித்த நடிகர் விஜய்

மறைந்த நடிகர் விவேக் அவர்களின் குடும்பத்தை சந்தித்த நடிகர் விஜய்

நடிகர் விவேக் அவர்கள் கடந்த ஏப்ரல் 17ம் தேதி உயிரிழந்தார்.

எப்போதும் சுறுசுறுப்பாக ஆக்டீவாக இருந்த அவர் திடீரென உயிரிழந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

அவரது மறைவை பற்றி இன்னும் பலரும் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள்.

விவேக் அவர்களின் மறைவின் போது விஜய் வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருந்தார், அவரால் நேரில் வர முடியவில்லை. அண்மையில் தான் விஜய் வெளிநாட்டில் இருந்து வீடு திரும்பினார்.

இங்கு வந்த முதல் வேலையாக மறைந்த நடிகர் விவேக் அவர்களின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

விஜய் மற்றும் விவேக் இருவரும் இணைந்து நடித்த படங்கள் ஏராளம், அவர்கள் கூட்டணியில் வந்த காமெடிகள் இப்போதும் மக்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES