ஜார்ஜியாவில் இருந்து திரும்பிய தளபதி விஜய், வெளியான மாஸ் புகைப்படங்கள்

ஜார்ஜியாவில் இருந்து திரும்பிய தளபதி விஜய், வெளியான மாஸ் புகைப்படங்கள்

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் தான் மாஸ்டர்.

இப்படம் பல்வேறு தடைகளுடன் வெளியாகிய போதும் கூட ரூ.250 கோடிகள் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

அதனை தொடர்ந்து இவர் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். வெளிநாட்டில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைந்து இந்தியா திரும்பவுள்ளனர்.

அந்த வகையில் தற்போது தளபதி விஜய் ஜார்ஜியா தனது படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார்.

இதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களிடையே தீயாய் பரவி வருகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES