மீண்டும் உடல் எடை கூடி குண்டான நடிகை லட்சுமி மேனன்- புகைப்படம் பார்த்து ரசிகர்கள் ஷாக்
தமிழ் சினிமாவில் நிறைய இளம் நடிகைகள் கலக்கி வந்தார்கள். அதில் ஒருவர் தான் நடிகை லட்சுமி மேனன்.
இவர் தொடர்ந்து நிறைய ஹிட் படங்கள் கொடுத்து வந்தார், அதற்குள் சில சர்ச்சைகளில் சிக்கினார்.
பின்னர் படங்கள் கமிட்டாகாமல் படிப்பில் கவனம் செலுத்திய அவர் உடல் எடை கூடி அடையாளமே தெரியாமல் இருந்தார், சின்ன சின்ன படங்களும் நடித்தார்.
இடையில் கேமரா பக்கம் வராமல் இருந்த லட்சுமி மேனன் திடீரென உடல் எடை குறைத்து புகைப்படங்கள் வெளியிட செம வைரலானது, ரசிகர்கள் செமயாக இருக்கிறார் என்றெல்லாம் கமெண்ட் செய்து வந்தனர்.
லட்சுமி மேனன், விக்ரம் பிரபுவுடன் நடித்த புலிக்குத்தி பாண்டி திரைப்படம் நேரடியாக சன் தொலைக்காட்சியில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.