சுல்தான் திரைவிமர்சனம்
கொரோனா அச்சத்தில் தமிழ் திரையுலகம் முடங்கி கிடந்த நேரத்தில், மாஸ்டர் படம் வெளியாகி அனைவருக்கும் படத்தை திரையரங்கில் வெளியீடு ஒரு வழியை அமைத்து தந்தது. அப்படத்தை தொடர்ந்து தற்போது கார்த்தி நடிப்பில் உருவான சுல்தான் திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது. ரெமோ திரைப்படத்திற்கு பிறகு பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் இன்று வெளியாகவுள்ள படம் சுல்தான். ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியாகியுள்ள சுல்தான், அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்று பார்ப்போம்.
கதைக்களம்
ரவுடிசத்தை தனது தொழிலாகவே கொண்டுள்ள நெப்போலியனுக்கு மகனாக பிறக்கிறார் கார்த்தி { சுல்தான் }. பிரசவத்தின் நேரத்தில் குழந்தையை மட்டுமே காப்பாற்ற முடிந்ததால், தன் தாயை தனது பிறப்பிலேயே கார்த்தி இழக்கிறார்.
தாயில்லாமல், 100 அடியாட்களிடம் வளரும் கதாநாயகன் { சுல்தான் }, அவர்கள் அனைவரையும் தனது சொந்த அண்ணனாக பார்க்கிறார். வெளிநாட்டில் வேலை செய்து வரும் கார்த்தி விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு வருகிறார்.
அதே சமையத்தில் தனது கிராமத்தை வில்லன் ஜெயசீலனிடம் இருந்து, நீங்கள் காப்பாற்றி தரவேண்டும் என்று நெப்போலியனிடம், பொன்வண்ணன் { விவசாயி } கேட்க, காப்பற்றி தருகிறேன் என்று நெப்போலியனும் வாக்களிக்கிறார்.
இதன்பின், போலீஸ் அதிகாரியின் மூலம் கார்த்தியின் வீட்டிற்குள் Food Delivery ஆட்களாக பூகுந்து, நெப்போலியன் உள்ளிட்ட 5 நபர்களுக்கு துப்பாக்கி சூடு நடக்கிறது. இதனால் ரவுடி கூட்டத்தில் நான் இருக்கமாட்டேன் என்று ஊரைவிட்டு கார்த்தி கிளம்பும் நேரத்தில், அந்த மனவருத்தத்தில் உயிரை விடுகிறார் நெப்போலியன்.
இதனால் தனது தந்தைக்கு பிறகு, தன்னை தூக்கி வளர்ந்த அண்ணன்களை பார்த்துக்கொள் வேண்டும் என்று, போலீஸ் அதிகாரியிடம் சென்று, 100 போரையும் திருத்த 6 மாதம் அவகாசம் கேட்கிறார் கார்த்தி.
ஆனால் தனது தலைவன் நெப்போலியன், கிராமத்தை காப்பற்றி தருவேன் என்று விவசாயின் பொன்வண்ணனிடம், கொடுத்த வாக்கை காப்பாற்ற கார்த்தியிடம் பொய் சொல்லி, பொன்வண்ணனின் ஊருக்கு, கார்த்தியின் சில ரவுடிகள் கிளம்புகிறார்கள். அவர்களுடன் உண்மையை அறியாமல் கார்த்தியும் செல்லுகிறார்.
ஆனால் அந்த ஊருக்கு சென்ற சில அசபாவிதங்கள் நடக்க, கார்த்திக்கு அனைத்து உண்மைகளும், தெரியவருகிறது. அதன்பின் எப்படி அந்த கிராமத்தை வில்லனிடமிருந்து கார்த்தி காப்பாற்றுகிறார், அங்கு சந்திக்கும் தனது காதலி, ருக்குமணி { ரஷ்மிகா மந்தனாவை } எப்படி கரம்பிடிக்கிறார் என்பது தான் படத்தின் மீதி கதை.
படத்தை பற்றிய அலசல்
வழக்கம் போல் தனது நடிப்பில் எந்த ஒரு குறையும் வைக்காமல் நடித்திருக்கிறார் நடிகர் கார்த்தி. அதேபோல் கார்த்திக்கும் உறுதுணையாக நிற்கும் நடிகர் லால் அவர்களின் நடிப்பும் பாராட்டுக்குரியது.
தனது முதல் தமிழ் படம் போல் இல்லாமல் கிராமத்து கதைக்களத்திற்கு நன்றாக பொருந்தியுள்ளார் நடிகை ரஷ்மிகா மந்தனா.
இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் எடுத்துக்கொண்ட கதைக்களம் புதிதாக இருந்தாலும், திரைக்கதை படத்தை கொஞ்சம் சொதப்பியுள்ளது.
ஹீரோவின் பில்டப்பிற்காக வில்லன் பேசும் வசனங்கள், படத்தை பார்ப்பவர்களுக்கு சலிப்பு தட்டுகிறது. படத்தில் இடம்பெறும் சண்டை காட்சிகளில் சிலவற்றை, ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
Vivek மற்றும் Marvinபாடல்கள், படத்திற்கு கூடுதல் பலம் தான். ஆனால், யுவன் சங்கர் ராஜா பின்னணி இசையில் எப்போதும் போல் மிரட்டியிருக்கிறார். சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு படத்திற்கு வலு சேர்க்கிறது.
க்ளாப்ஸ்
கார்த்தி, லாலின் நடிப்பு
Vivek - Marvin பாடல்கள்
சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு
பல்ப்ஸ்
திரைக்கதை கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்
தேவையில்லாத வசனங்கள்
மொத்தத்தில் கமெர்ஷியல் ரசிகர்களுக்கு சுல்தான் விருந்தாக அமைந்துள்ளது.