மீனா சொன்ன அதிர்ச்சி தகவல்.. ஷாக்காகி நிற்கும் விஜயா!! சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் நடக்கவிருப்பது இதுதான்

மீனா சொன்ன அதிர்ச்சி தகவல்.. ஷாக்காகி நிற்கும் விஜயா!! சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் நடக்கவிருப்பது இதுதான்

சிறகடிக்க ஆசை

வீடு ஜப்தி செய்யப்பட்ட நிலையில், விஜயா ஸ்ருதி வீட்டில் தங்கியிருந்தார். ஆனால், அங்கு தனக்கு பிடிக்காத பல விஷயங்களை ஸ்ருதியின் அம்மா செய்ததால், அங்கிருந்து கிளம்பி மனோஜின் ஷோரூமுக்கு வந்துவிட்டார். அதன்பின், அண்ணாமலை, முத்து, மீனா என மூவரும் வந்து அழைத்ததால் தற்போது மீனாவின் வீட்டில் விஜயா தங்கியுள்ளார்.

வீட்டிற்குள் வரும்போதே முகம் சுளித்துக்கொண்ட விஜயா, எதற்கு எடுத்தாலும் குறைகளை மட்டுமே சொல்லிக்கொண்டே இருக்கிறார். சரி, இது ஒரு பக்கம் இருக்க, ஆங்கிலம் கற்றுக்கொள்ள முத்து, மீனா இருவரும் சென்றிருந்தனர். அங்கு வருமான வரித்துறையில் பணியாற்றி வருபவரின் நட்பு முத்துவிற்கு கிடைக்க, அதை வைத்து பைனாஷியரிடம் அதிக வட்டி குறித்து முத்து பேசினார்.

அதிர்ச்சி தகவல்

இந்த நிலையில், பணம் கொடுத்தது பைனாஷியர் கிடையாது, ஒவ்வொரு முறையும் விஜயா, மனோஜ் கேட்கும் போதெல்லாம் பணம் கொடுத்தது சிந்தாமணி என்கிற உண்மை முத்து, மீனாவிற்கு தெரிய வந்துள்ளது. இந்த உண்மையை அப்படியே விஜயாவிடம் மீனா கூற, இதற்கெல்லாம் காரணம் சிந்தாமணி என தெரிந்து அதிர்ச்சியில் உறைந்துபோய் நிற்கிறார்.

மீனா சொன்ன அதிர்ச்சி தகவல்.. ஷாக்காகி நிற்கும் விஜயா!! சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் நடக்கவிருப்பது இதுதான் | Vijaya Knows About The Truth In Siragadikka Aasai

இதுதான் அடுத்த வாரம் சிறகடிக்க ஆசை சீரியலில் நடக்கவுள்ளது என புரோமோ இன்றைய எபிசோடின் இறுதியில் வெளியாகியுள்ளது. இதை தொடர்ந்து வேறு என்னென்ன ட்விஸ்ட் எல்லாம் சிறகடிக்க ஆசை சீரியலில் நடக்கப்போகிறது என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம். 

LATEST News

Trending News

HOT GALLERIES