கொடுமை தாங்க முடியாமல் ஸ்ருதி வீட்டிலிருந்து வெளியேறிய விஜயா.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது
சிறகடிக்க ஆசை
சொந்த வீடு ஜப்தி செய்யப்பட்ட நிலையில், அண்ணாமலை மீனாவின் வீட்டிற்கும், விஜயா ஸ்ருதியின் வீட்டிற்கும் சென்றனர்.

இதில் மீனாவின் வீட்டில் அண்ணாமலைக்கு நல்ல உபசரிப்பு கிடைத்து, அவரை நன்றாக பார்த்துக்கொள்கிறார்கள். ஆனால், விஜயாவிற்கு ஸ்ருதி வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை.
வெளியேறிய விஜயா
அவர்களுடைய உணவு முறையும், அவர்களுடன் பழக்கவழக்கங்களும் விஜயாவிற்கு மன சங்கடத்தை கொடுத்துள்ளது. ஒரு கட்டத்தில் கோபமடைந்த விஜயா 'நான் வீட்டிலிருந்து வெளியேறுகிறேன்' என கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி மனோஜ் தங்கியிருக்கும் அவருடைய கடைக்கு செல்கிறார்.
இந்த நிலையில், இதனை அறிந்து முத்து, மீனா மற்றும் அண்ணாமலை ஆகியோர் கடைக்கு வருகிறார்கள். இதன்பின், மீனா தனது வீட்டிற்கு விஜயாவை அழைக்கிறார். இப்போது விஜயா எடுக்கப்போகும் முடிவு என்ன என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.