பணமெல்லாம் வேஸ்ட்.. தங்கத்தில் போட்டிருக்கலாம்.. சமீரா ரெட்டி வேதனை

பணமெல்லாம் வேஸ்ட்.. தங்கத்தில் போட்டிருக்கலாம்.. சமீரா ரெட்டி வேதனை

சென்னை: வாரணம் ஆயிரம் படத்தில் தமிழ்நாடு இளைஞர்களின் மனதை கவர்ந்தவர் சமீரா ரெட்டி. அதற்கு பிறகு அவர் வெடி, அசல் என பல படங்களில் நடித்தாலும் முதல் படம் கொடுத்த அலாதியை அந்தப் படங்கள் கொடுக்கவில்லை. திடீரென அவருக்கு மார்க்கெட் சரிய கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இப்போது ஒட்டுமொத்தமாக சினிமாவிலிருந்து ஒதுங்கியிருக்கும் அவர்; சமீபத்தில் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.

மும்பையை சேர்ந்த சமீரா ரெட்டி அஜித் ஹீரோவாக நடித்த சிட்டிசன் படத்தில் ஹீரோயினாக கமிட்டானவர். ஆனால் சில காரணங்களால் அவரால் நடிக்க முடியவில்லை. அதனைத் தொடர்ந்து ஹிந்தியில் திரை பயணத்தை தொடங்கினார். முதல் படம் ஓரளவுக்கு வரவேற்பை பெற அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. அதன்படி, பிளான்,முஸாஃபிர் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அந்த படங்கள் எல்லாம் சமீராவை பாலிவுட்டை தாண்டியும் அடையாளம் பெற வைத்தது. அதன் பலனாக அவருக்கு தெலுங்கு வாய்ப்புகளும் கிடைத்தன.

Should Have Invested in Gold Sameera Reddy s Honest Confession Goes Viral

தமிழில் அறிமுகம்: தொடர்ந்து ஆங்கிலம், பெங்காலி மொழிகளில் எல்லாம் பிஸியாக நடித்துவந்த அவரை கௌதம் மேனன் தனது வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு அழைத்து வந்தார். சூர்யா ஹீரோவாக நடித்திருக்க சமீரா ரெட்டி ஜோடியாக நடித்திருந்தார். படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. முக்கியமாக சமீராவுக்கான கிரேஸ் முதல் படத்திலேயே எகிறியது. படத்தில் இடம்பெற்ற ரயில் காட்சிகள், அமெரிக்க காட்சிகள், நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை, அடியே கொல்லுதே பாடல்கள் எல்லாம் சமீராவுக்காகவே ரசிக்கப்பட்டன.

தமிழில் பிஸி: வாரணம் ஆயிரம் தமிழ்நாட்டில் ஒரே நாட்டில் சமீராவை பிரபலமாக்கியதை அடுத்து இங்கும் வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. அதன்படி அவர் நடித்த வெடி படம் மோசமான தோல்வியை பெற்றது. அஜித்துக்கு ஜோடியாக அசல் படத்தில் எல்லாம் நடித்தார். ஆனால் படம் படுதோல்வியை சந்தித்தது. உடனடியாக அவர் குணசித்திர வேடங்களுக்கு ஷிஃப்ட் செய்யப்பட்டார். அதன்படி வேட்டை படத்தில் அமலா பாலுக்கு அக்காவாக நடித்திருந்தார். அந்தப் படம் மட்டும் ஓரளவுக்கு பெயரை பெற்றுக்கொடுத்தது.

திருமணமாகி செட்டில்: தமிழ் கைவிட்டதை தொடர்ந்து ஹிந்தி, தெலுங்கு பக்கம் சென்று பார்த்தார். அங்கேயும் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. இதனையடுத்து சினிமாவில் இருப்பது சரியில்லை என்பது முடிவு செய்து திருமணம் செய்துகொண்டு செட்டிலானார். கடந்த 2014ஆம் ஆண்டு அவருக்கு திருமணம் நடந்தது. இப்போது சினிமாவிலிருந்து ஒதுங்கியிருக்கும் அவர் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் பேட்டியில் அவர், "ஆடம்பரமாக செலவு செய்தால் பின்னால் கண்டிப்பாக நமக்கு கஷ்டம்தான் வரும்.

இன்று லாபமாக இருந்திருக்கும்: சக நடிகைகள் விமான நிலையத்துக்கு வரும்போது விலையுயர்ந்த பைகளை வைத்திருப்பதை பார்த்து நானும் வாங்குவேன். அதன் விலை 1.70 லட்சம் ரூபய், 2.50 லட்சம் ரூபாய், 4 லட்சம் ரூபாய் என இருக்கும். அதேபோல் ஜாக்கெட்டுகளையும் வாங்கினேன். மற்றவர்கள் மதிக்க வேண்டும் என்பதற்காக இதை நான் செய்தேன். அந்தப் பணத்தை மட்டும் தங்கத்தில் முதலீடு செய்திருந்தால் இன்று அவ்வளவு லாபமாக இருந்திருக்கும்" என்றார்.

 

 

 

LATEST News

Trending News

HOT GALLERIES