பாடகி தீ-​யின் புதிய இசை ஆல்​பம்

பாடகி தீ-​யின் புதிய இசை ஆல்​பம்

பின்​னணி பாடகி​யான தீ, ‘வாரி வாரி’ என்ற புதிய இசை ஆல்பத்தை வெளி​யிட்​டுள்​ளார்.

‘மெட்​ராஸ்’ திரைப்​படத்​தில் வரும் ‘நான் நீ’ பாடல் மூலம் சினிமாவில் அறி​முக​மான தீ, ‘இறு​திச் சுற்​று’, ‘காலா’ உள்பட பல படங்களில் பின்​னணி பாடி​யுள்​ளார். ‘மாரி 2’ படத்​தில் இடம்​பெறும் ‘ரவுடி பேபி’ பாடல் மூலம் உலகளா​விய புகழைப் பெற்ற அவர், 2021ம் ஆண்டு சந்​தோஷ் நாராயணனுடன் இணைந்து ‘என்​ஜாய் என்​ஜாமி’ பாடலை வெளி​யிட்​டதன் மூலம் சர்​வ​தேச ஸ்ட்ரீமிங் தளங்​களில் பிரபல​மா​னார்.

வோண்​டாகர்ள், திவா சாவேஜ் ஆகியோ​ருடன் இணைந்து வெளியான ‘ஏன்​சி​யன்ட் சீட்’ மற்​றும் எட் ஷீரனுடன் இணைந்து ‘டோன்ட் லுக் டவுன்’ போன்ற சர்​வ​தேச அளவி​லான பாடல்​களில் பங்​கேற்று வந்த அவர், தற்​போது ‘வாரி வாரி’ என்ற புதிய தமிழ்ப் பாடலை வெளி​யிட்​டுள்​ளார். சந்​தோஷ் நாராயணன் இசை​யில், கவிஞர் விவேக் எழு​திய வரி​களு​ட​னும், விஸ்வா ரெக்​கார்ட்​ஸுடன் இணைந்து இப்​பாடலை தீ வெளி​யிட்​டுள்​ளார்.

நெருக்​க​மான மற்​றும் உணர்​வு​களை வெளிப்​படை​யாகக் காட்டும் காதல் பாடலான இது பற்றி தீ கூறும்​போது, “இந்​தப் பாடல் நம்மை விட்​டுப் பிரிந்த, இல்​லாத ஒரு​வரையோ அல்​லது ஒன்​றையோ பற்​றியது. தொலைந்து போன ஓர் உணர்​வைப் பற்றியது, இந்​தப் பாடல் முழு​வதும் வழி​யில் நீங்கள் தொலைத்​திருக்​கக் கூடிய உங்​களைத் தேடி, அந்த உணர்வை மீண்​டும் பெற முயற்சிப்​ப​தாகும்” என்​றார்.

LATEST News

Trending News

HOT GALLERIES