த்ரிஷாவின் இன்ஸ்டா போஸ்ட்.. தேர்தல் வரைக்கும் கொஞ்சம் சும்மா இருங்க மேடம்.. கடுப்பான ஃபேன்ஸ்!
சென்னை: நடிகை த்ரிஷா குறித்து பலவிதமான வதந்திகளும், சர்ச்சைகளும் இணையத்தில் வந்து கொண்டு இருக்கும் இந்த நேரத்தில், த்ரிஷா எதை பற்றியும் கவலைப்படாமல் இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார். தற்போது அவர் பதிவிட்டு இருக்கும் போஸ்டால் ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர்.
தவெக தலைவர் விஜய்: தமிழக வெற்றிக்கழகத் தலைவரும், நடிகருமான விஜயின் மனைவி சங்கீதா பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கடந்த ஐந்து வருடங்களாக நானும் எனது கணவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறோம். மகிழ்ச்சியாக எங்கள் குடும்ப வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. என் கணவர் நடிகை ஒருவருடன் உறவில் இருந்தார். அந்த உறவை முறித்துக் கொள்ளும்படி பலமுறை எடுத்து சொல்லியும், அவர் கேட்காததால் கடந்த 2021 ஆம் ஆண்டில் இருந்து நாங்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறோம். இதனால் விவாகரத்து வேண்டும், அவரின் பெயருக்கும் புகழுக்கும் தகுந்தபடி ஜீவனாம்சம் வேண்டும் என அந்த புகார் மனுவில் கூறப்பட்டு இருந்தது.

சர்ச்சை: இது இணையத்தில் மிகப்பெரிய அளவில் புயலை கிளப்பிய நிலையில், அந்த நடிகை திரிஷா தான் என இணையத்தில் பலவிதமான செய்திகள் பரவின. அதையும் உறுதிப்படுத்தும் வகையில் இருவரும் திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு ஒரே காரில், ஒரே நிற உடையில் கலந்து கொண்டனர். இது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது மட்டுமில்லாமல், கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இன்ஸ்டா போஸ்ட்: இப்படி பலவிதமான பஞ்சாயத்து நடந்து கொண்டு இருந்தாலும், த்ரிஷா இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து இணையத்தில் அவ்வப்போது ஏதாவது கருத்தை பகிர்வதை வேலையாக வைத்து இருக்கிறார். அந்த வகையில் தற்போது, நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராமில் காதல் குறித்து ஒரு பதிவினை போட்டுள்ளார். அதில், "காதல் மட்டும் எல்லாம் அல்ல... ஆனால், காதல் இல்லாமல் அனைத்தும் அர்த்தமற்றது" என பதிவிட்டுள்ளார். இந்த பதிவினை பார்த்த பலர் த்ரிஷா என்ன சொல்கிறார் என்றும், தேர்தல் வரைக்கும் கொஞ்சம் சும்மா இருங்க மேடம் என கடுப்பாகி கமெண்ட் பாக்ஸில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.