மிகவும் வலி நிறைந்த நாட்கள்... இந்தியன் 3 ஷூட்டிங் அனுபவங்களை பகிர்ந்த காஜல் அகர்வால்
நடிகைகளின் வாழ்க்கை வெளியே இருந்து பார்க்க கலர்ஃபுல்லாக இருக்கும். ஆனால், அதன் உண்மையான நிலைமை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும். முன்பெல்லாம் திருமணம், குழந்தை பிறந்த பிறகு நடிகைகள் சினிமா துறையை விட்டு விலகி விடுவார்கள். ஆனால் இப்போது அப்படியில்லை. திருமணம், குழந்தைகள் தங்களுக்கு எந்த தடையும் இல்லை என்ற பிடிவாதத்துடன் நடிகைகள் தங்கள் கெரியரில் கவனம் செலுத்துகின்றனர். ஆனால் இதே காரணத்திற்காக அவர்கள் பல வலிகளையும் அனுபவிக்கிறார்கள். கெரியர் மீதான அன்பு, குழந்தை மீதான பாசம் அவர்களை இருதலைக்கொள்ளி எறும்பாக தள்ளுகிறது. அப்படிப்பட்ட ஒரு அனுபவத்தை நடிகை காஜல் அகர்வால் வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.
அவர் கூறியதாவது : ‘குழந்தை பிறந்து இரண்டு மாதங்களிலேயே நான் இந்தியன் 3 படப்பிடிப்பில் கலந்துகொண்டேன். நான் குதிரையேற்றம், களரிப்பயிற்று கூட செய்தேன். உண்மையிலேயே அவை மிகவும் வலி நிறைந்த நாட்கள். ஷங்கர் சார் எங்களைப் புரிந்துகொண்டார். அவர் தேதிகளை சரிசெய்ய முயன்றார். ஆனால், என்றாவது ஒருநாள் நான்தான் படப்பிடிப்பை முடிக்க வேண்டியிருந்தது. இவ்வளவு கடினமான விஷயங்களை என் வாழ்க்கையில் நான் செய்ததே இல்லை. நாங்கள் திருப்பதியில் படப்பிடிப்பு நடத்தியபோது குழந்தையையும் அழைத்துச் சென்றேன். படப்பிடிப்புக்கு இடையில் பிரேக் கிடைத்தால் போதும், ஓடிவந்து குழந்தைக்குப் பால் கொடுப்பேன்.’ இப்படி மிகுந்த வேதனையுடன் தனது கஷ்டங்களைச் சொல்லியிருக்கிறார் நடிகை காஜல் அகர்வால்.