பெண்ணிற்கு அடிமையாகி, பித்தில் அப்பாவையே விட்டுக்கொடுத்த நடிகர்!! கலக்கத்தில் குடும்பம்..
சினிமா பின்னணியுடன் அண்ணன் இயக்கிய படத்திலேயே ஹீரோவாக நடித்து எந்த வம்புக்கும் செல்லாமல் தான் உண்டு தன் வேலையுண்டு குடும்பம் உண்டு என்று இருந்து வந்தவர், நடிகையின் மூலம் அறிமுகமாகிய பெண்ண காதலிக்க, வீட்டு சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின் பல வருடங்களாகி குழந்தைகளுடம் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். தற்போது சர்ச்சையின் மறு உருவமாக மாறியிருக்கிறார் அந்த நடிகர்.

அதாவது, மனைவியும் மாமியாரும் தன்னை கண்ட்ரோல் செய்வதால் எந்த ரியாக்ஷனும் செய்யமுடியாமல் இருந்தார். ஒருக்கட்டத்தில் மனைவியை பிரிவதாக கூறி, ஒட்டுமொத்த சினிமாத்துறையையே அதிரவைத்தார்.
மனைவி, மாமியாரின் டார்ச்சரால் தான் இந்த விவாகரத்து முடிவை எடுத்தேன் என்று கூறிய சில நாட்களிலேயே இன்னொரு பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கம் படுக்கை வரை சென்றுள்ளது.
ஆரம்பத்தில் வதந்திகள் எல்லாம் பொய் என்று கூறி வந்த நடிகர், தற்போது எங்கு போனாலும் அந்த பெண்ணுடம் தான் சுற்றி வருகிறார்.

இந்த முடிவுக்கு முதலில் அவரது குடும்பம் ஆதரவு கொஞ்சம் கொடுத்தாலும், பெண்ணின் பின்னணியை விசாரித்தபோது கண்டிப்பாக ஒத்து வராது என்று சொல்லி இருக்கிறார்கள். மேலும் அவளை விட்டுவிலகிவிடு என்று கூறியிருக்கிறார் நடிகரின் குடும்பத்தினர்.
ஆனால் பெண்ணின் மோகத்தில் முழ்கிய நடிகரோ அப்பா சொல்லியும் கேட்காமல் அந்த பெண்ணுடன் இருக்கிறாராம். தற்போது அவரை பற்றிய புது கிசுகிசு கிளம்பியிருக்கிறது. நடிகரின் அப்பாவுக்கு சில நாட்களாக உடல்நிலை சரியில்லையாம்.
அவரை பார்ப்பதற்காக வருகிறேன் என்று நடிகர் சொன்னால், அந்த பெண்ணோடு வரக்கூடாது, தனியாக வா என்று சொல்லியிருக்கிறார்கள் குடும்பத்தினர். எவ்வளவோ சொல்லியும் நடிகருக்கு தோல்வியே கிடைக்க, அந்த பெண் தான் எனக்கு வேண்டாம் நீங்கள் வேண்டாம் என்று சொல்லி அப்பாவை பார்க்கவே சொல்லவில்லையாம்.
அதுமட்டுமில்லாமல் விரைவில் திருமணம் செய்து கொள்ளவிரும்புதாகவும் இஷ்டம் இருந்தால் வாருங்கள் என்று சொல்லிவிட்டாராம் அந்த நடிகர்.