தனுஷோடு நடிக்கும் எந்த ஹீரோயினும் அழகு இல்ல.. ஒருவர்தான் அழகாம்.. என்ன அவர் அம்மா இப்படி சொல்லிட்டாங்க
பான் இந்தியா அளவில் தனுஷ் இப்போது டாப் ஹீரோக்களில் ஒருவர். தமிழில் இட்லி கடை படத்தில் நடித்த அவர்; மறுபக்கம் ஹிந்தியில் தேரே இஷ்க் மெய்ன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படி படு பிஸியாக நடித்துவரும் தனுஷ் சமீபத்தில் இட்லி கடை வெற்றியை கொண்டாடும் வகையில் தனது குல தெய்வ கோயிலுக்கு சென்று வழிபட்டார். இந்நிலையில் தனுஷின் அம்மா கொடுத்த பேட்டி ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.
கஸ்தூரி ராஜாவின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமான தனுஷ் இப்போது தனித்த அடையாளமாக திகழ்ந்துகொண்டிருக்கிறார். சொல்லப்போனால் அந்த குடும்பத்துக்கு ஆலமரமாக வளர்ந்து நிற்கிறார். நடிகராக கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என மின்னிக்கொண்டிருக்கும் அவர்; இயக்குநராகவும் வெற்றியை ருசிக்க தொடங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து இரண்டு மகன்களை பெற்றார். தனுஷும், ஐஸ்வர்யாவும் நல்லபடியாக வாழ்ந்துவந்த சூழலில் திடீரென அவர்கள் பிரிவை அறிவித்து; சட்டப்பூர்வமாக விவாகரத்தையும் பெற்றுவிட்டார்கள். இரண்டு மகன்களையும் கோ பேரண்ட்டிங் முறையில் அவர்கள் வளர்த்துவருகிறார்கள். மேலும் தனுஷுக்கு விரைவில் இரண்டாவது திருமணம் என்ற தகவலும் பரவியது. ஆனால் அதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வரவில்லை
பெர்சனல் வாழ்க்கையில் விழுந்த அடியை மறக்கடிக்கும் விதமாக அமைந்திருக்கிறது இட்லி கடை படத்தின் ரிசல்ட். அவரே இயக்கியிருக்கும் இப்படம் சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது. ஃபீல் குட் படம் என்று விமர்சன ரீதியாக கொண்டாடப்படுகிறது. மேலும் தனுஷுக்குள் இப்படி ஒரு கைதேர்ந்த இயக்குநரா என்றும் பலர் தங்களது பாராட்டை தெரிவித்துவருகிறார்கள்.
போட்டிக்கு காந்தாரா திரைப்படம் வெளியாகி வசூலை வாரி குவித்தாலும்; இட்லி கடை ஸ்டாண்டர்டாக ஒரு வசூலை எடுத்துதான் வருகிறது. மொத்தம் ஐந்து நாட்களில் கிட்டத்தட்ட 40 கோடி ரூபாய்வரை படம் வசூலித்துவிட்டதாக பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக இந்தப் படம் தனுஷின் கரியரில் ஹிட் லிஸ்ட்டில் சேர்ந்துவிட்டது. எனவே அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
இந்நிலையில் தனுஷின் தாய் கொடுத்த பழைய பேட்டி ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது. காஃபி வித் டிடியில் ஒருமுறை கலந்துகொண்ட அவரது தாயிடம், தனுஷோடு எந்த ஹீரோயின் நடித்தால் நன்றாக இருக்கும் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர், 'எந்த ஹீரோயின் நடித்தாலும் அழகாக இருக்காது. அவர்களுடன் நடிக்கையில் தனுஷ் மட்டும்தான் என் கண்களுக்கு அழகாக தெரிவார்" என்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் அட தனுஷ் மீது எவ்வளவு பாசம் என்று கமெண்ட்ஸ் செய்ய ஆரம்பித்து ட்ரெண்டாக்கிவருகிறார்கள்.