அசுரன் படத்துல இல்லாத மியூசிக் விஸ்வாசம் படத்துல என்ன இருக்கு? இமானை இணையத்தில் கலாய்க்கும் ரசிகர்கள்

அசுரன் படத்துல இல்லாத மியூசிக் விஸ்வாசம் படத்துல என்ன இருக்கு? இமானை இணையத்தில் கலாய்க்கும் ரசிகர்கள்

2019 ஆம் ஆண்டில் வெளியான அனைத்து மொழி சினிமாக்களுக்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழில் அசுரன் படத்திற்காக தனுஷ் சிறந்த நடிகர் என்ற விருதை வாங்கி உள்ளார். அவரைத் தொடர்ந்து பார்த்திபன் இயக்கிய ஒத்த செருப்பு திரைப்படம் 2 விருதுகளை அள்ளியுள்ளது.

யாரும் எதிர்பார்க்காத வகையில் தல அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றிய டி இமான் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது வாங்கியது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.

2019ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் அசுரன் படத்திற்கு எவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்தது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அதிலும் குறிப்பாக ஜிவி பிரகாஷின் இசை ரசிகர்களை உணர்ச்சி பொங்க வைத்தது.

அனைவருமே சிறந்த இசையமைப்பாளர் விருது ஜிவி பிரகாஷுக்கு தான் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில் திடீரென இமானுக்கு அந்த விருது அறிவிக்கப்பட்டது. அதிலிருந்து சமூகவலைதளத்தில் அவரை வைத்து கலாய்த்து வருகின்றனர்.

memes-01

memes-01

தல அஜீத் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் 2019ஆம் ஆண்டு பொங்கல் விடுமுறையை முன்னிட்டு வெளியாகி மிகப்பெரிய வசூலை அள்ளிய திரைப்படம் விஸ்வாசம். குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது.

memes-02

memes-02

மற்றபடி விஸ்வாசம் திரைப்படம் ஒரு கமர்சியல் திரைப்படம் தான். ஆனால் அசுரன் திரைப்படம் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் வெளியானது. அதுமட்டுமில்லாமல் அசுரன் படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் ரசிகர்களை பெருமளவு கவர்ந்த நிலையில் எப்படி விஸ்வாசம் திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைத்தது என்பதை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மாறி மாறி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES