பாக்ஸ் ஆபிஸ் காத்து வாங்குகிறது! விஜய்யின் குஷி படத்திற்கு இப்படி ஒரு நிலைமையா
விஜய் - எஸ்.ஜே. சூர்யா கூட்டணியில் உருவாகி 2000ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் குஷி. இது விஜய்யின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ஜோதிகா, மும்தாஜ், விவேக், விஜயகுமார் என பலரும் நடித்திருந்தனர்.
இந்த நிலையில், 25 ஆண்டுகள் கழித்து ரீ ரிலீஸ் ஆகியுள்ள குஷி திரைப்படத்தை முதல் நாள் திரையரங்கில் ரசிகர்கள் கொண்டாடினார்கள். அந்த வீடியோக்கள் எல்லாம் கூட சமூக வலைத்தளத்தில் வைரலானது.
ஆனால், பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்த அளவிற்கு வசூல் குவியவில்லை. ஆம், ரீ ரிலீஸாகி நான்கு நாட்கள் ஆகும் நிலையில், இதுவரை உலகளவில் ரூ. 1.7+ கோடி வசூல் செய்துள்ளது.
இது விஜய்யின் ரீ ரிலீஸ் படத்திற்கு மிகவும் குறைவான வசூலாக பார்க்கப்படுகிறது. விஜ்ய்யின் ரீ ரிலீஸ் படத்திற்கு மவுசு குறைந்துவிட்டதாக என்கிற பேச்சு எழுந்துள்ளது.