ரஜினியுடன் 4 முறை நடிக்க மறுத்த பிரபல நடிகை.. இது தெரியாம போச்சே!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார்.
இவரின் படத்தில் ஒரு சிறு ரோலில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத என்று பல நடிகர் மற்றும் நடிகைகள் காத்து கொண்டிருக்க ரஜினி படத்தில் நடிக்க ஒரு நடிகை நிராகரித்திருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா?.
ஆம், ஒன்றல்ல, இரண்டல்ல 4 முறை இந்த நடிகை நிராகரித்திருக்கிறார். அவர் வேறு யாரும் இல்லை நடிகை ஐஸ்வர்யா ராய் தான்.
இவர் ரஜினியின் படையப்பா, பாபா , சிவாஜி, சந்திரமுகி ஆகிய படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் நிராகரித்துள்ளார். அதன் பின், இயக்குநர் ஷங்கரின் 'எந்திரன்' படத்தில் ரஜினி ஜோடியாக நடித்தார்.