``சமூக ஊடகங்களில் இருந்து சில காலம் விலக முடிவு'' - நடிகை அனுஷ்கா அறிவிப்பு

``சமூக ஊடகங்களில் இருந்து சில காலம் விலக முடிவு'' - நடிகை அனுஷ்கா அறிவிப்பு

அருந்ததி எனும் மாபெரும் வெற்றிப் படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் ரசிகர்களை உருவாக்கியவர் நடிகை அனுஷ்கா. தொடர்ந்து சிங்கம், பாகுபலி, பாகமதி, ருத்ரமாதேவி, மிஸ்டர் அண்ட் மிஸஸ் பாலிஷெட்டி எனத் தொடர்ந்து தன் நடிப்புக்கான படங்களைத் தேர்வு செய்து நடித்து வந்தார்.

இந்த நிலையில், ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது 'காதி'. செப்டம்பர் 5-ம் தேதி வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதே நேரம் அனுஷ்காவின் ஆக்‌ஷன் காட்சிகளும், நடிப்பும் பெரும் வரவேற்பை பெற்றது.

அனுஷ்கா

இந்த நிலையில், நடிகை அனுஷ்கா தன் எக்ஸ் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ``மெழுகுவர்த்தி வெளிச்சத்திற்காக நீல ஒளியை விற்கிறேன்.

உலகத்துடன் மீண்டும் இணைவதற்கும், ஸ்க்ரோலிங்கைத் தாண்டி வேலை செய்வதற்கும், சமூக ஊடகங்களில் இருந்து சில காலம் விலகியிருக்க விரும்புகிறேன்.

நாம் அனைவரும் உண்மையில் தொடங்கிய இடத்திற்குச் செல்வோம். நல்ல கதைகளுடன், இதேப் போல அதிக அன்புடனும் விரைவில். எப்போதும் மகிழ்வோடு இருங்கள்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

சில மாதங்களுக்கு முன்பு தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்தப் பேட்டியில், ``நான் முற்றிலும் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறேன்.

ஒரு வலுவான கதாபாத்திரம் வந்தால், நான் நிச்சயமாக வில்லி வேடத்தில் நடிப்பேன். நான் புதிய ஸ்கிரிப்ட்களைக் கேட்டு வருகிறேன். நல்ல கதைகள் இருக்கின்றன.

தற்போது மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறேன். இதுதான் எனது முதல் மலையாளப் படமாக இருக்கும். தெலுங்கிலும் ஒரு புதிய படம் ஒப்பந்தமாகியிருக்கிறேன். அதுவும் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்." எனத் தெரிவித்திருந்தார்.

LATEST News

Trending News