மீண்டும் ஹாலிவுட்!.. ஸ்பைடர் மேனாக நடிக்கிறாரா தனுஷ்?!.. பரபர அப்டேட்!…
துள்ளுவதோ இளமை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் தனுஷ். அதன்பின் காதல் கொண்டேன், புதுப்பேட்டை என கவனம் ஈர்த்தார். இவருக்கென ரசிகர்களும் உருவானார்கள். ஒல்லியான உடலமைப்பை வைத்துக் கொண்டு ரவுடியாகவெல்லாம் நடித்து திரையில் அதகளம் செய்தார்.
அதேபோல் கமர்சியல் மசாலா படங்களில் நடித்தும் தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கினார்.
மசாலா படங்களில் நடித்தாலும் அவ்வப்போது நல்ல கதையம்சம் கொண்ட நடிப்புக்கு தீனி போடும் படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். அப்படி அவர் நடித்த ஆடுகளம், அசுரன், கர்ணன் ஆகிய படங்கள் பேசப்பட்டது.
இதில் ஆடுகளம், அசுரன் ஆகிய இரண்டு படங்களுக்காக தனுஷ் தேசிய விருது வாங்கினார். ஒரு பக்கம் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்படங்களை இயக்கியும் வருகிறார் தனுஷ். இதுவரை பவர் பாண்டி, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், ராயன், இட்லி கடை ஆகிய நான்கு படங்களை இயக்கியிருக்கிறார். இதில் இட்லி கடை திரைப்படம் வருகிற அக்டோபர் 1ஆம் தேதி வெளியாக உள்ளது.
ஒருபக்கம் தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார் தனுஷ். அதேபோல் ஹாலிவுட்டிலும் இரண்டு படங்களில் நடித்திருக்கிறார். 2018 ஆம் ஆண்டு வருடம் வெளியான The extraordinary journey of the fakir மற்றும் 2022ம் ஆண்டு வெளியான The Grey Man ஆகிய படங்களில் தனுஷ் நடித்திருந்தார்.
இந்நிலையில், அடுத்த வருடம் ரிலீஸாகவுள்ள அவெஞ்சர்ஸ் சீக்ரெட் வார்ஸ் (Avengers Secret Wars) என்கிற படத்தில் தனுஷ் ஸ்பைடர் மேனாக நடிக்க அதிக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. தற்போது அதுபற்றிய பேச்சுவார்த்தை துவங்கப்பட்டிருப்பதாகவும் தனுஷ் கண்டிப்பாக அதில் நடிப்பார் எனவும் சொல்லப்படுகிறது. அவெஞ்சர்ஸ் படத்தில் தனுஷ் நடித்தால் உலக அளவில் அவர் பிரபலமடைவார் என்பது குறிப்பிடத்தக்கது.