அஜித்தை ரெக்கமண்ட் பண்ணதே நான்தான்!.. புது உருட்டா உருட்டிய பார்த்திபன்!..

அஜித்தை ரெக்கமண்ட் பண்ணதே நான்தான்!.. புது உருட்டா உருட்டிய பார்த்திபன்!..

இயக்குனர் பாக்கியராஜிடம் உதவியாளராக இருந்தவர் ஆர்.பார்த்திபன். பல போராட்டங்களுக்குப் பின் ஒரு கதை எழுதி அதில் அப்போது முன்னணி நடிகராக இருந்த ரஜினி. கமல் உள்ளிட்ட பலரையும் பார்த்து கதை சொல்லி அதெல்லாம் முடியாமல் போய் அந்த கதையில் தானே நடித்தார். அப்படி உருவான புதிய பாதை திரைப்படம் அவருக்கு ஒரு நல்ல முகவரியாக அமைந்தது.
கமலின் அபூர்வ சகோதரர்கள் படத்தோடு வெளியான படம் நல்ல வசூலை பெற்றதோடு பார்த்திபனுக்கு தேசிய விருதையும் பெற்றுக் கொடுத்தது.

எதையும் வித்தியாசமாக யோசிப்பவர் என ரசிகர்களிடம் பெயர் எடுத்த பார்த்திபன் தொடர்ந்து பல படங்களை இயக்கி நடித்தார். ஆனால் அவற்றில் அவர் வித்தியாசமாக முயற்சி செய்த புள்ளக்குட்டிக்காரன். குடைக்குள் மழை, ஒத்த செருப்பு, ஹவுஸ் ஃபுல் உள்ளிட்டபல படங்கள் அவருக்கு நஷ்டத்தை கொடுத்தது. உள்ளே வெளியே, கதை திரைக்கதை வசனம் இயக்கம் போன்ற சில படங்கள் மட்டுமே அவருக்கு லாபத்தை கொடுத்தது.

ஆனாலும் பிடித்ததைதான் செய்வேன் என்கிற நம்பிக்கையில் மனநிலையில் தொடர்ந்து படங்களை இயக்கி வருகிறார். ஒரு மற்ற இயக்குனர்களின் இயக்கத்திலும் பல படங்களிலும் நடித்திருக்கிறார். இப்போதும் அது தொடர்கிறது. இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பார்த்திபன் ‘நிறைய பட வாய்ப்புகளை நான் தவிர்த்து இருக்கிறேன். நாட்டாமையில் விஜயகுமார் கதாபாத்திரம், காசி படத்தில் விக்ரம் நடித்த கதாபாத்திரம் எல்லாவற்றிலும் முதலில் நடிக்கவிருந்தது நான்தான். சிட்டிசன் படத்தில் கூட ஹீரோவாக நடிக்க என்னைத்தான் கேட்டார்கள். நான்தான் அஜீத்தை சிபாரிசு செய்தேன்’ என சொல்லி இருக்கிறார் பார்த்திபன்.

இதையடுத்து ‘இது புது உருட்டா இருக்கே.. அந்த கதாபாத்திரங்கள் எல்லாம் பார்த்திபனுக்கு செட்டே ஆகாது. அதில் அந்த நடிகர்கள் நடித்ததுதான் சரி’ என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

LATEST News

Trending News