ரவுண்டு 2க்கு ரெடியா?..கட்டா குஸ்தி பார்ட் 2… ப்ரோமோ ரிலீஸ்..

ரவுண்டு 2க்கு ரெடியா?..கட்டா குஸ்தி பார்ட் 2… ப்ரோமோ ரிலீஸ்..

தமிழ் சினிமாவின் எதிர்பாராமல் வந்து எதிர்பார்ப்பை மீறி வெற்றி பெரும் படங்கள் சில உண்டு. அந்த வரிசையில் இடம் பெற்ற படம் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடித்து 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’கட்டா குஸ்தி’. மேலும் இந்த படத்தில் கருணாஸ், முனீஸ் காந்த், காளி வெங்கட், ஹரிஷ் பேரடி, ரெட்டின் கிங்ஸ்லி போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இந்த படத்தை செல்ல அய்யாவு இயக்கியிருப்பார்.

மேலும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்திருப்பார். கதைப்படி குடும்பத்துக்கு ஏற்ற குடும்ப குத்து விளக்கான கூச்ச சுபாவம் உள்ள சொல் பேச்சு கேட்கின்ற மனைவி வேண்டும் என்று ஹீரோ ஆசைப்படுகிறார். அவருக்கும் அதே போல பெண் கிடைத்ததாக நினைத்து அவரும் திருமணம் செய்து கொள்கிறார். ஆனால் அதற்குப் பிறகு தான் தெரிகிறது தன்னை அறியாமலே ஒரு துணிச்சலான மல்யுத்த வீரரை தான் திருமணம் செய்துள்ளோம் என்று தன் மனைவியைப் பற்றி உண்மை தெரியும் பொழுது

தன் பின் என்ன நடக்கும் என்று சுவாரசியமாக காமெடி கலந்து இந்த படம் நகரும். குறுகிய பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் கணிசமான லாபத்தை சம்பாதித்தது. விஷ்ணு விஷாலுக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு வெற்றி படமாக கட்டா குஸ்தி அமைந்தது. இந்நிலையில் தற்போது தமிழ் சினிமாவில் பார்ட் 2 கலாச்சாரம் அதிகமாகி வருகிறது. அந்த வரிசையில் விஷ்ணு விஷாலும் தன்னுடைய கட்டா ஒஸ்தி படத்தின் இரண்டாம்‌ பாகத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.

இதன் அறிவிப்பு வீடியோ இன்று வெளியாகி இருக்கிறது. அதில் இந்த படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் ஐசரி கணேஷ் இந்த படத்தை தயாரிக்கிறார். மேலும் இதில் முதல் பாகத்தில் நடித்திருந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி முனிஸ்காந்த், கருணாஸ், காளி வெங்கட் போன்ற நடிகர்கள் இந்த படத்திலும் நடிக்க இருக்கிறார்கள்.

ப்ரோமோவில் இயக்குனர்,” பொண்டாட்டி பிரிஞ்சு போயிட்டா ஒரு நாள் தான் கஷ்டம் ஆனால் சேர்ந்திருந்தால் ஒவ்வொரு நாளும் கஷ்டம் தான்” என்று கூறுகிறார். அப்போ இதுதான் கட்டா குஸ்தி 2 வின் கதை என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறார். இந்த கான்செப்ட்டை வைத்து தான் கட்டா குஸ்தி-2 படத்தின் கதைகளம் இருக்கும் என்று தெரிகிறது.

இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல் பாகம் எதிர்பாராமல் வந்து எதிர்பார்த்த வெற்றியை பெற்றது. இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு இப்பவே அதிகமாகிவிட்டது. அதேபோல படமும் சொல்லி அடிக்குமா என்பது ரிலீஸிக்கு பின் தெரிய வரும்.

LATEST News

Trending News