ரசிகர் கேட்ட அந்தரங்க கேள்வி.. பொசுக்குன்னு உள்ளாடையை அனுப்பி விட்ட நடிகை மாளவிகா மோகனன்.. என்ன ஆச்சு?
தென்னிந்திய சினிமாவில் தனது நடிப்பு மற்றும் கவர்ச்சியால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் நடிகை மாளவிகா மோகனன். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர், ரசிகர்களுடன் கேள்வி-பதில் நிகழ்ச்சிகளில் ஈடுபடுவது வழக்கம்.
ஆனால், இம்முறை ஒரு ரசிகரின் "விவகாரமான" கேள்விக்கு மாளவிகா அளித்த பதிலும், அதைத் தொடர்ந்து இணையவாசிகளின் கருத்துகளும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
சமீபத்தில், மாளவிகா மோகனனின் எக்ஸ் தளத்தில் நடந்த கேள்வி-பதில் நிகழ்ச்சியில், ஒரு ரசிகர், "டூ-பீஸ் உடையில் உங்கள் புகைப்படத்தை வெளியிடுங்கள்" என கேட்டு, அவரது அந்தரங்க அழகை ரசிக்க ஆசைப்பட்டதாக தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த மாளவிகா, உடனடியாக ஒரு "டூ-பீஸ்" உடையின் புகைப்படத்தை பதிவிட்டு, ரசிகருக்கு நகைச்சுவையுடன் பதிலடி கொடுத்தார். ஆனால், அவர் பதிவிட்டது அவரது உடலை அல்ல, வெறும் டூ-பீஸ் உடையை மட்டும் எடுத்த புகைப்படமாக இருந்தது! இது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியதோடு, இணையத்தில் வைரலானது.
இந்த புகைப்படத்தைப் பார்த்த இணையவாசிகள், "இதுதான் நீச்சல் உடைனு சொன்னீங்களா? இது உள்ளாடை மாதிரி இருக்கே!" என்று கிண்டலடித்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
"மாளவிகாவின் சமயோஜித பதிலடி செம்ம!" என்று ஒரு தரப்பு பாராட்ட, "இதை விட நல்லா நடிக்கலாமே!" என்று மற்றொரு தரப்பு கலாய்த்து வருகிறது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாளவிகா மோகனன், தமிழில் 'பேட்ட', 'மாஸ்டர்', 'தங்கலான்' உள்ளிட்ட படங்களில் நடித்தவர். தற்போது கார்த்தியுடன் 'சர்தார் 2', பிரபாஸுடன் 'தி ராஜா சாப்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், அவரது இந்த பதிலடி இணையவாசிகளிடையே பேசு பொருளாகியுள்ளது.இதற்கு முன்பும், ரசிகர்களின் நக்கல் மற்றும் விமர்சனங்களுக்கு நகைச்சுவையுடன் பதிலளித்து பிரபலமானவர் மாளவிகா.
இந்த முறையும் அவரது சாமர்த்தியமான பதில், ரசிகர்களை கவர்ந்து, சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.