50 லட்சம்.. 40 நாட்கள் தொடர் உல்லாசம்.. கேரவேனில் நாசமாகும் நடிகைகள்.. விஜய் சேதுபதி கொடூர முகம்..
பிரபல நடிகர் விஜய் சேதுபதி மீது சமீபத்தில் ஒரு பரபரப்பான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக, பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன், ‘புதிய சிந்தனை’ என்ற யூட்யூப் சேனலில் அளித்த பேட்டியில் இந்த விவகாரத்தைப் பற்றி விரிவாகப் பேசியுள்ளார்.
இந்தப் பேட்டியில், ரம்யா மோகன் என்ற பெண் ஒருவர், விஜய் சேதுபதியின் கேரவனில் பணம் பெற்றதாகவும், அதன் பின்னர் அவரது நண்பர் தொடர்புடையவர் என்று கூறி சர்ச்சையை கிளப்பியதாகவும் குறிப்பிடப்பட்டது.
பயில்வான் ரங்கநாதன், இந்தக் குற்றச்சாட்டு குறித்து காட்டமாக பதிலளித்தார். “ஏன் இப்படி பினாத்துறீங்க? நேரடியாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டியதுதானே? மீ டூ என்று சொல்கிறீர்கள், ஆனால் யார் மீது என்று பெயர் குறிப்பிடாமல் பேசுவது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், சினிமாவில் இத்தகைய ‘எழுதப்படாத விதிகள்’ இருப்பதாகவும், இவற்றுக்கு உட்பட்டு சிலர் நடிப்பதற்காக இத்தகைய சூழ்நிலைகளை ஏற்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதாவது எனக்கு தெரிந்த ஒரு தயாரிப்பாளர் பற்றி கூறுகிறேன் அவர் 50 லட்சம் ரூபாய் செலவில் ஒரு படத்தை தயாரித்தார் அவர் என்னிடம் சொன்னது எனக்கு படம் எடுக்க வேண்டும் படம் போட வேண்டும் என்றெல்லாம் எந்த ஆசையும் கிடையாது.
50 லட்சம் ரூபாய் பணத்தை போட்டேன் 40 நாள் ஷூட்டிங் நடந்தது அந்த 40 நாளும் கும்தலக்கா கும்தலக்கா என செம்ம ஜாலியாக இருந்தேன். அவ்வளவுதான். எனக்கு மிகவும் மகிழ்ச்சி என கூறினார். ஆக நடிகைகளை அனுபவிக்க வேண்டும் என்று 50 லட்சம் ரூபாய் பணத்தை போட்டு படத்தை எடுத்திருக்கிறார் ஒரு தயாரிப்பாளர். இது 90களில் நடந்த ஒரு விஷயம்.
மறுபக்கம் நான் நடிகையாக வேண்டும் எந்த லெவலுக்கும் இறங்கி வருவதற்கு நான் தயாராக இருக்கிறேன் என்று நடிகைகள் தயாராக இருக்கிறார்கள். இப்போது நடிகைகளின் சமூக வலைதள கணக்குகளை எடுத்து பாருங்கள். சினிமாவில் 10 படம் நடித்து பிரபலமாக இருக்கும் நடிகை கூட பார்ப்பதற்கு கண் கூசும் அளவுக்கு கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிடுகிறார்.
இப்படி எல்லாம் புகைப்படத்தை வெளியிடுவது எதற்கு இதை எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் காவல் துறையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது சட்டமும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.
சினிமாவில் நடிப்பதற்காக பணம் சம்பாதிப்பதற்காக எதையும் செய்வதற்கு தயார் என்ற நடிகைகள் இருக்கும்போது நடிக்கவே வரக்கூடிய நடிகைகள் அனைவரும் இப்படியான சிக்கலுக்கு உள்ளாக தான் செய்வார்கள் என்று கூறிய ரங்கநாதன், “சினிமாவில் இத்தகைய ‘சாக்கடைகள்’ ஓடுவது உண்மைதான். ஆனால், யாரும் பெயரை வெளிப்படையாக சொல்வதில்லை. இதற்கு ஏன் வருகிறீர்கள்? வர வேண்டாம்.
வாய்ப்புக்காக வருபவர்கள் இதற்கு தயாராக இருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். இது சினிமாவின் யதார்த்தம்,” என்று கூறினார்.
விஜய் சேதுபதியின் வெற்றியை பொறாமையால் இத்தகைய குற்றச்சாட்டுகள் எழுவதாக ரங்கநாதன் குறிப்பிட்டார். “விஜய் சேதுபதி ஒரு தமிழன். எந்த பின்பலமும் இல்லாமல், துணை நடிகராக இருந்து இன்று கதாநாயகனாக உயர்ந்திருக்கிறார்.
அவரது படம் ‘தலைவன் தலைவி’ 60-70 கோடி ரூபாய் வசூல் செய்து வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியை சிலர் பொறுத்துக்கொள்ள முடியவில்லை,” என்று அவர் கூறினார்.
மேலும், “மாரிசன் என்ற படத்துக்கு எதிராக வந்த ‘தலைவன் தலைவி’ வெற்றி பெற்றது. இதனால், பொறாமையால் இத்தகைய குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன.
விஜய் சேதுபதி ஒரு நல்ல மனிதர். இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்று அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்,” என்று ரங்கநாதன் தெரிவித்தார்.
சினிமாவில் இத்தகைய பிரச்சனைகள் நடப்பது புதிதல்ல என்று கூறிய ரங்கநாதன், “நடிகைகள் வாய்ப்புக்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறார்கள் என்று சிலர் கூறுகிறார்கள்.
இதை மறுக்க முடியாது. ஆனால், இதை வெளிப்படையாக பேசுவதற்கு யாரும் தயாராக இல்லை. இந்த சாக்கடைகளை அகற்றுவதற்காகத்தான் நான் போராடுகிறேன்,” என்று உணர்ச்சிபூர்வமாக பேசினார்.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விஜய் சேதுபதி, “இவை அனைத்தும் பொய்யானவை. என் மீது வேண்டுமென்றே அவதூறு பரப்பப்படுகிறது.
இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். இனி யாராவது இதுபற்றி பேச வேண்டுமானால், காவல் நிலையத்தில் பேசுங்கள்,” என்று தெரிவித்துள்ளார்.
விஜய் சேதுபதி மீதான இந்த குற்றச்சாட்டு, சினிமா துறையில் நீண்ட காலமாக இருக்கும் சில எழுதப்படாத விதிகளையும், அதனால் ஏற்படும் சர்ச்சைகளையும் மீண்டும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.
பயில்வான் ரங்கநாதனின் பேட்டி, இந்த விவகாரத்தில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. விஜய் சேதுபதியின் வெற்றியை பொறாமையால் சிலர் இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும், அவர் ஒரு நேர்மையான தமிழனாக, எந்த பின்பலமும் இல்லாமல் உயர்ந்தவர் என்றும் ரங்கநாதன் ஆதரவாக பேசியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து மேலும் விசாரணைகள் நடைபெற உள்ள நிலையில், இது சினிமா துறையில் உள்ள பிரச்சனைகளை மீண்டும் விவாதத்துக்கு உட்படுத்தியுள்ளது.