இளையராஜா விவகாரம்.. வனிதாவின் காம லீலைகள்.. மகளுக்காக பிட்டு படத்தில் வனிதா.. பிரிந்த காதலர்கள்..
பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் தனது சமீபத்திய வீடியோவில் நடிகை வனிதா விஜயகுமார் மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா இடையே எழுந்த காப்புரிமை விவகாரம் குறித்து பேசியுள்ளார்.
வனிதா நடிப்பில் வெளியாகியுள்ள “மிஸ்டர் அண்ட் மிஸஸ்” திரைப்படத்தின் கதைக்களத்தையும் அவர் விமர்சித்துள்ளார். இப்படம் மிகவும் மோசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ளதாகவும், முகம் சுளிக்க வைக்கும் காட்சிகளைக் கொண்டிருப்பதாகவும் ரங்கநாதன் குறிப்பிட்டார்.
மேலும், வனிதாவின் மகள் ஜோவிகாவின் சம்பாத்தியத்தில் இப்படம் தயாரிக்கப்பட்டது வேதனை அளிப்பதாகவும் தெரிவித்தார். “எல்லா படங்களுக்கும் ஆதரவு கொடுக்கிறீர்கள், இதற்கும் ஆதரவு கொடுங்கள்” என்று வனிதா கூறுவதை ஏற்க முடியாது என்று அவர் விமர்சித்தார்.
அவரது கூற்றுப்படி, இப்படம் ஒரு “பிட்டு படம்” என்பதால், அதற்கு குறிப்பிட்ட ரசிகர்கள் மட்டுமே ஆதரவு அளிப்பார்கள்.வனிதாவின் கவர்ச்சியான தோற்றம் குறித்து பேசிய ரங்கநாதன், 40 வயதிலும் அவர் இளமையாகவும், கட்டுக்கோப்பாகவும் இருப்பதை பாராட்டினார்.
தனக்கு விருப்பமான குட்டையான ஆடைகளை அணிந்து தைரியமாக தோன்றுவதை அவர் புகழ்ந்தார். இருப்பினும், இளையராஜாவின் “ராத்திரி சிவராத்திரி” பாடலை அனுமதியின்றி பயன்படுத்தியதாக எழுந்த காப்புரிமை விவகாரத்தில், “நான் இளையராஜா வீட்டின் மருமகள் ஆக வேண்டியவள்” என்ற வனிதாவின் கூற்றை அவர் கடுமையாக மறுத்தார்.
இது “அப்பட்டமான பொய்” என்று கூறிய ரங்கநாதன், வனிதாவின் காம லீலைகலில் இதுவும் ஒன்று. இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜாவைப் பற்றி பேசிய வனிதாவின் கருத்துகள் உண்மையல்ல என்றும், கார்த்திக் ஒரு அமைதியான, அளவோடு பேசும் நபர் என்றும் தெரிவித்தார்.
வனிதாவின் பேச்சு பொதுவாகவே நம்பகத்தன்மையற்றது என்று குறிப்பிட்ட அவர், இந்த விவகாரத்தில் அவரது குற்றச்சாட்டுகளை ஏற்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறினார்.