கொரோனா காலத்தில் களமிறங்கிச் சேவை செய்ததற்காக நடிகர் சோனு சூட்டிற்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் கவுரம் செய்துள்ளது.
கடந்த வருடம் மார்ச் மாதம் முழுவதும் கொரோனா பரவல் தீவிரம் அடைந்தது. இதையடுத்து, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில் ஓரளவு கொரோனா வைரஸ் குறைந்துவந்த நிலையில் கொரோனா வைரஸ் இரண்டாம் கட்டபரவல் அதிகரித்துவருகிறது.
இதைத்தடுப்பதற்கான கோவேசின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பு மருந்துகள் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது. இது பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில் கொரோனா காலத்தில் களமிறங்கிச் சேவை செய்ததற்காக நடிகர் சோனு சூட்டிற்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் கவுரம் செய்துள்ளது.
அதாவது சோனுசூட்டின் புகைப்படத்தை விமானத்தில் ஒட்டி அவரது சேவையைப் பாராட்டியுள்ளது. இதனால் சோனுசுட்டின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து இந்தப் புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.
ஏற்கனவே சோனு சூட்டின் மக்கள் நல சேவையைப் பாராட்டி ஐநா விருந்து வழங்கியுள்ளது. இதில்லாமல் மக்கள் அவருக்கு கோயில் கட்டி வழிபடுகின்றனர்.
A top airline honours @SonuSood heroic gesture during the pandemic by dedicating a livery to him!#Sonusood pic.twitter.com/5UrtNrZgOS
— Ramesh Bala (@rameshlaus) March 20, 2021