30 வருடத்திற்கு முன்பே பிரபு படத்தில் நடித்துள்ள பிரபல கிரிக்கெட் வீரர்.. அட, இவரு லெக் ஸ்பின்னர் ஆச்சே!
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வாரிசு இளைய திலகம் பிரபு நடித்த படம் ஒன்றில் தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவர் கெஸ்ட் ரோலில் நடித்துள்ள காட்சியை தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சமீபகாலமாக கிரிக்கெட் வீரர்கள் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விட்டனர். அந்த வகையில் இர்பான் பதான் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகிய இருவருமே தமிழ் படங்களில் நடித்து வருகின்றனர். ஆனால் இருவருமே தமிழர்கள் இல்லை என்பது வேறு விஷயம்.
மற்ற கிரிக்கெட் வீரர்களைக் காட்டிலும் ஹர்பஜன் சிங் தற்போது தொடர்ந்து சினிமாவில் நடிக்க அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் தமிழ் சினிமாவில் அவரது நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாக உள்ளன. அதில் ஒன்று பிரெண்ட்ஷிப். மற்றொன்று சந்தானம் நடித்துள்ள டிக்கிலோனா.
தற்போதைய கிரிக்கெட் வீரர்கள் சினிமாவில் நடிப்பது ஒன்றும் ஆச்சரியமல்ல. ஆனால் 1990 காலகட்டங்களில் ஒரு கிரிக்கெட் வீரர் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று நினைத்தால் முடியுமா. நடித்தும் காட்டி இருக்கிறார் பிரபல லெக் ஸ்பின்னர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன்.
laxman-sivaramakrishnan
தமிழ்நாடு கிரிக்கெட் வீரரான இவர் இந்தியாவுக்காக சில போட்டிகளில் விளையாடியுள்ளார். தற்போது கிரிக்கெட்டை தொகுத்து வழங்கும் வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார். இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் 1990 ஆம் ஆண்டு இளைய திலகம் பிரபு நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான ராஜா கைய வச்சா படத்தில் நடித்துள்ள வீடியோவை பகிர்ந்துள்ளார்.
laxman-sivaramakrishnan-01
தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் அதிக அளவில் உலா வருகிறது. இதனை மற்றொரு தமிழ்நாடு கிரிக்கெட் வீரரான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் என்பவருக்கு டேக் செய்துள்ளார்.