“துருவ நட்சத்திரம்” ரிலீஸ் தேதி வெளியானது! கௌதம் மேனன் கொடுத்த அப்டேட்! ரசிகர்கள் உற்சாகம்!

“துருவ நட்சத்திரம்” ரிலீஸ் தேதி வெளியானது! கௌதம் மேனன் கொடுத்த அப்டேட்! ரசிகர்கள் உற்சாகம்!

கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி, நீண்ட காலமாக வெளியீட்டிற்காக காத்திருக்கும் படம் ‘துருவ நட்சத்திரம்’. பலமுறை வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு, பல்வேறு காரணங்களால் தள்ளிப்போன இப்படம், இறுதியாக ஜூலை அல்லது ஆகஸ்ட் 2025-ல் கண்டிப்பாக வெளியாகும் என இயக்குநர் கவுதம் மேனன் உறுதிப்பட தெரிவித்துள்ளார். 

சமீபத்திய பேட்டி ஒன்றில் கவுதம் மேனன் கூறுகையில், “‘துருவ நட்சத்திரம்’ படத்தை வெளியிட்ட பின்னரே அடுத்த படத்திற்கு செல்ல முடிவு செய்துள்ளேன். இதற்காக இயக்கம், நடிப்பு உள்ளிட்ட அனைத்து பணிகளையும் தற்காலிகமாக நிறுத்திவிட்டேன். 

Dhruva Natchathiram release date July August 2025 Gautham Menon confirmation

படத்தை பல முதலீட்டாளர்களுக்கு திரையிட்டு காட்டினேன். அவர்கள் படம் மிகவும் நன்றாக இருப்பதாக பாராட்டியுள்ளனர். தற்போது படத்தின் சட்டரீதியான சிக்கல்களை தீர்க்க பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகிறேன். 

ஜூலை அல்லது ஆகஸ்டில் படம் நிச்சயம் வெளியாகும்,” என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார். விக்ரம், ரித்து வர்மா, பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், டிடி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை ஒன்றாக என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. 

ஸ்டைலிஷ் ஆக்ஷன் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் வெளியீடு குறித்து பலமுறை பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. இந்த முறை கவுதம் மேனனின் உறுதியான அறிவிப்பால், ரசிகர்கள் மத்தியில் படத்தின் வெளியீடு குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

‘துருவ நட்சத்திரம்’ படத்தின் இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜ் பணியாற்றியுள்ளார். விக்ரமின் தோற்றமும், படத்தின் டீசரும் ஏற்கனவே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இந்த அறிவிப்பு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LATEST News

Trending News