திருமணமான ஒரு மாசத்துக்கு முன்பே கர்ப்பமாகிட்டேன்!! அமலா பால் கொடுத்த ஷாக்...

திருமணமான ஒரு மாசத்துக்கு முன்பே கர்ப்பமாகிட்டேன்!! அமலா பால் கொடுத்த ஷாக்...

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் அமலா பால். இவர் தமிழில் வெளிவந்த மைனா படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். பின் விஜய்யுடன் இணைந்து தலைவா, தனுஷுடன் இணைந்து வேலையில்லா பட்டதாரி ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார்.

திருமணமான ஒரு மாசத்துக்கு முன்பே கர்ப்பமாகிட்டேன்!! அமலா பால் கொடுத்த ஷாக்... | Amala Paul Says Before Marriage Become Pregnant

இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த ஆடு ஜீவிதம் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகை அமலா பால் கடந்த 2023ம் ஆண்டு ஜகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.

சமீபத்தில் அமலா பால் அளித்த பேட்டியில், நான் முதலில் ஜகத் தேசாயை சந்தித்த ஒரு மாதத்திலேயே கர்ப்பமாகிவிட்டேன். முதலில் கர்ப்பமடைந்த பின் தான் திருமணம் செய்து கொண்டேன். இலை (அமலா பாலின் மகன் பெயர்) எங்கள் வாழ்க்கையில் வந்தது ரொம்பவே சந்தோஷம்.

திருமணமான ஒரு மாசத்துக்கு முன்பே கர்ப்பமாகிட்டேன்!! அமலா பால் கொடுத்த ஷாக்... | Amala Paul Says Before Marriage Become Pregnant

குழந்தைக்காக நாங்கள் எங்கள் ஈகோ அனைத்தையும் உடைத்து தூக்கி எறிந்துவிட்டோம். குழந்தையால் எங்கள் ரிலேஷன்ஷிப் மேலும் பலமாகியது. இந்த உறவை நான் டிவைன் என்று சொல்கிறேன்.

அதேபோல் இலை வந்தப்பின் நான் இவ்வளவு பொறுமையாக இருப்பேனா என்று தோன்றியது, ஏனென்றால் எனக்கெல்லாம் பொறுமையே இல்லை. என் அண்ணன் கூட என்னிடம், நீ இவ்வளவு பொறுமையாக இருப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டதாக அமலா பால் தெரிவித்துள்ளார்.

LATEST News

Trending News