பப்லுவை ஷுட்டிங்கில் செருப்பால் அடித்தாரா ராதிகா!! வாணி ராணி சீரியலில் நடந்த சம்பவம்..

பப்லுவை ஷுட்டிங்கில் செருப்பால் அடித்தாரா ராதிகா!! வாணி ராணி சீரியலில் நடந்த சம்பவம்..

குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து தற்போது குணச்சித்திர ரோல், வில்ல ரோல் உள்ளிட்ட பல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருபவர் பப்லு என்ற பிரித்திவிராஜ். பல மொழிகளில் நடித்து பப்லு, 90ஸ் காலக்கட்டத்தில் சீரியல்களிலும் நடித்து புகழ்பெற்றவர். குறிப்பாக ராதிகா தயாரித்து நடித்த சீரியல்களில் அவர் நடித்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கும்.

பப்லுவை ஷுட்டிங்கில் செருப்பால் அடித்தாரா ராதிகா!! வாணி ராணி சீரியலில் நடந்த சம்பவம்.. | Babloo Opens Up About Radhikas Vani Rani Serial

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், ராதிகா சரத்குமாருடன் வாணி ராணியில் நடித்தது ஏழரை நாட்டு சனி என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் பேசுகையில், என் கேரக்டரில் பெஸ்ட் பர்ஃபாம் என்று சொன்னாது அது அரசி, வாணி ராணி சீரியல் தான்.

நான் வாணி ராணி சீரியலில் நடித்துக் கொண்டிருந்தபோது, ஏன் ஓவராக நடிக்கிறீர்கள், மேடம் திட்டுறாங்கன்னு என்னிடம் வந்து சொல்லுவார்கள். இதனால் என்னை நானே கட்டுப்படுத்திக்கொண்டு நடிக்க ஆரம்பித்தேன். திட்டு வாங்கிவிடுவோமா என்ற பயம் இருந்ததால் கட்டுப்படுத்திக்கொண்டு சில காட்சிகளில் நடிக்க ஆரம்பித்தேன்.

என்னை ஃப்ரீயாக விட்டு இருந்தால் இன்னும் சிறப்பாக நடித்திருப்பேன். சின்ன கேமராவில் இப்படி நடிக்கணும் பெரிய கேமராவில் இப்படி நடிப்பேன் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால் வாணி ராணி சீரியலில் இப்படி நடித்தால் போதும் என்று நினைத்தேன். ராதிகாவை பற்றி ஏன் அப்படி பேசுகிறீர்கள் என்று கேட்கிறார்கள்.

பப்லுவை ஷுட்டிங்கில் செருப்பால் அடித்தாரா ராதிகா!! வாணி ராணி சீரியலில் நடந்த சம்பவம்.. | Babloo Opens Up About Radhikas Vani Rani Serial

ராதிகாவிடமே இதுகுறித்து கேட்டால், ஆமாம் பப்லுவை நான் செருப்பால் அடித்தேன், கெட்டகெட்ட வார்த்தையால் திட்டுவேன் என்று பெருமையாக சொல்வார்கள். என்னை அவன் தவறாக பேசிவிட்டானா என்று நினைக்கமாட்டார், அது அவர் சுபாவம், ஆனால் நான் அன்று பேசி இருக்கக்கூடாது.

உணர்ச்சிவசப்பட்டு அப்படி சொல்லிவிட்டேன் என்று பப்லு தெரிவித்துள்ளார். மேலும் பேசியவர், ஆஸ்திரேலியாவில் சூட்டிங் நடந்தபோது, நான் தனியாக ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டுக்கொண்டு இருந்தேன். ஆனால் அங்கு இருந்த நடிகை நடிகர்களுக்கு வெளியிலிருந்து சமைத்த சாப்பாடு வரும்.

ஒருமுறை அப்படி வைத்த மதிய உணவு கெட்டுப்போனது. இதை என்னிடம் பல நடிகை, நடிகர்கள் கூறினார்கள். நான் உடனே ராதிகாவிடம் இதைப்பற்றி கேட்டேன். அவர் அனைவரையும் அழைத்து சாப்பாடு நன்றாக இல்லையா என்று கேட்டபோது யாரும் கெட்டுப்போனதாக சொல்லாமல் நன்றாக இருந்ததாக கூறினர்.

உடனே ராதிகா வேண்டும் என்றே பிரச்சனை செய்றியா என என்னை திட்டினார். அதன்பின் நானே அழைத்துச்சென்று சாப்பாட்டை காட்டினேன், அன்றிலிருந்து அனைவருக்கும் நல்ல உணவு கிடைத்ததாக பப்லு தெரிவித்துள்ளார்.

LATEST News

Trending News