தொடையை மட்டும் தான் காட்டுனேன்.. ஒட்டு மொத்த கோலிவுட்டும் காலி.. போதையில் ஆடும் நடிகை..
தென்னிந்திய திரையுலகில் வேகமாக வளர்ந்து வரும் நடிகை ஒருவர், அக்கட தேசத்தில் ஏற்கனவே தனக்கென ஒரு நிலையான இடத்தை பிடித்துவிட்டார். அவரது படங்கள் அங்கு நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார்.
இவர் நடிப்பில் வெளியான முதல் தமிழ் படமே சூப்பர் டூப்பர் ஹிட்டாக அமைந்ததால், நடிகை தற்போது வெற்றி மமதையில் தலை கால் தெரியாமல் ஆடி வருகிறாராம்.
ஹோம்லியாகவும் அதே சமயம் கிளாமராகவும் ரசிகர்களை கவரும் வசீகரமான தோற்றம் கொண்ட இந்த நடிகையை பல முன்னணி நடிகர்களும், இயக்குனர்களும் அணுகி வருகின்றனர்.
நடிகையும் கதையை கேட்டவுடன், கதைக்கு அப்பாற்பட்டு தான் என்ன செய்ய வேண்டும் என்று வெளிப்படையாகவே கேட்கிறாராம். இதனால் இயக்குனர்களும் நடிகர்களும் தாங்கள் எதிர்பார்த்த விஷயங்களை தயங்காமல் கூற, நடிகையும் தனக்கு உடன்பாடு இருந்தால் உடனே ஓகே சொல்லி விடுகிறாராம்.
ஒருவேளை நடிகைக்கு ஆட்சேபனை இருந்தால், தனக்கு என்ன வேண்டும் என்பதை தெளிவாக கூறி, அதற்கு பதிலாக வேறு யோசனைகளையும் வழங்குகிறாராம்.
இதனால் வந்தவரை லாபம் என்று நினைத்து இயக்குனர்களும் நடிகர்களும் அங்கிருந்து சந்தோஷமாக புறப்படுகிறார்களாம். நடிகர்களும் இயக்குனர்களும் தாங்கள் நினைத்ததை சாதித்துவிட்டோம் என்று சந்தோஷப்பட்டாலும், நடிகையோ அவர்களை வைத்து தான் நினைத்ததை சாதித்துவிட்டதாக நம்புகிறாராம்.
காரணம், அந்த நடிகர்களும் இயக்குனர்களும் பெரும்பாலும் ஒரே மொழியில் படங்கள் எடுப்பார்கள் என்றாலும், அவர்களை பயன்படுத்தி மற்ற மொழி திரையுலகிலும் தனக்கான இடத்தை விரிவுபடுத்தி விட்டதாக நடிகை மகிழ்ச்சியில் திளைக்கிறாராம்.
அப்படி நடிகை விரித்த வலையில் இளம் இயக்குனர் மற்றும் இளம் நடிகர் ஒருவர் சமீபத்தில் சிக்கியுள்ளனர். வந்தவர்களை விடக்கூடாது, சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்க அவர்கள் உதவுவார்கள் என நினைத்த நடிகை, அந்த இளம் இயக்குனர் மற்றும் நடிகரின் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம்.
படம் முழுவதும் நடிகை தோன்றாவிட்டாலும், தனக்கென்று ஒரு ரொமான்டிக் பாடல் காட்சி படத்தில் உள்ளது என்று கூறியதால் தான் அவர் நடிக்க சம்மதித்தாராம். அந்த பாடலுக்கு தான் விரும்பும் உடைகளை தனது காஸ்ட்யூமர் டிசைன் செய்ய வேண்டும் என்றும் நடிகை நிபந்தனை விதித்தாராம்.
இளம் ரத்தங்களும் வேறு வழியின்றி நடிகையின் டீலிங்கிற்கு ஓகே சொல்லிவிட்டார்களாம். அந்த பாடல் காட்சியில் நடிகை கச்சிதமான கவர்ச்சியை காட்டியதால், படம் வெளியானதும் அந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
மேலும் படம் பார்த்த பலரும் நடிகையை இணையத்தில் தேடி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பார்த்து ரசித்து வருகின்றனர். படத்தின் ரிலீஸுக்கு பிறகு நடிகையின் இன்ஸ்டாகிராம் பாலோவர்களின் எண்ணிக்கை சட்டென உயர்ந்ததால், நடிகை தமிழில் தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை பிடித்துவிட்டதாக உற்சாகத்தில் உள்ளாராம்.
இது தொடர்பாக தனது நெருங்கிய வட்டாரத்தில் நடிகை, "நான் தொடையை தான் காட்டினேன், ஆனால் மொத்த கோலிவுட்டுமே இப்போது எனது பெயரைத்தான் உச்சரித்து வருகிறது" என்று பெருமையாக கூறியுள்ளாராம். இந்த விஷயத்தை கேள்விப்பட்டவர்கள், நடிகை வெற்றி போதையில் ரொம்பவும் ஆடுகிறார் என்று கிசுகிசுத்து வருகின்றனர்.