நடிகை சாய் பல்லவி இதை போட மாட்டாங்க.. நடிகர் ஸ்ரீகாந்த் கன்றாவி பேச்சு..! வெடித்த சர்ச்சை..!

நடிகை சாய் பல்லவி இதை போட மாட்டாங்க.. நடிகர் ஸ்ரீகாந்த் கன்றாவி பேச்சு..! வெடித்த சர்ச்சை..!

பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் சமீபத்தில் தனது நடிப்பில் வெளியாகியுள்ள "கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்" திரைப்படத்தின் விளம்பர விழாவில் பேசியது தற்போது இணையத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

திரையுலகம் மற்றும் தனது நடிப்பு பயணம் குறித்து பல விஷயங்களை அவர் பகிர்ந்து கொண்டாலும், நடிகை சாய் பல்லவி குறித்து அவர் பேசிய கருத்தும், மது அருந்துவது குறித்த அவரது ஒப்பீடும் பலதரப்பட்ட விவாதங்களை கிளப்பியுள்ளது.

நடிகர் ஸ்ரீகாந்த் ஆடை மற்றும் மதுப்பழக்கம் குறித்து பேசுகையில், "மது குடிப்பதில் ஆண், பெண் வேறுபாடு கிடையாது. அதேபோலத்தான் ஆடை விஷயத்திலும் ஆண், பெண் வேறுபாடு பார்க்க தேவையில்லை. 

ஒரு நடிகை இருக்கிறார், எந்த ஆடை கொடுத்தாலும் அணிகிறார் என்றால் அது அவருடைய விருப்பம். ஏதாவது ஒரு ஆடையை அணிய மாட்டேன் என்கிறார் என்றால் அதுவும் அவருடைய விருப்பம். 

அவரை இதை அணிந்துதான் ஆக வேண்டும், இதை அணியக் கூடாது என்று யாரும் வற்புறுத்துவதற்கு அதிகாரம் இல்லை. உதாரணமாக நடிகை சாய் பல்லவியை எடுத்துக் கொள்ளுங்கள், அவரிடம் ஒரு கவர்ச்சியான ஆடையை கொடுத்து போட்டுக்கொள்ள சொன்னால் போடுவாரா? சாய் பல்லவி கிளாமரான உடைகளை போட மாட்டாங்க. 

அதுபோல ஒரு விஷயம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் பிடிக்கலை, முடியாது என சொல்ல பழகிக் கொள்ளுங்கள்" என்று பேசினார்.

ஸ்ரீகாந்தின் இந்த கருத்துக்கள் இரண்டு விதமான சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

ஸ்ரீகாந்த் "ஆண் பெண் வேறுபாடு இல்லாமல் மது அருந்தலாம்" என்று பேசியது, ஆண்களுக்கு நிகராக பெண்களும் மது அருந்துவதை ஊக்குவிக்கும் விதமாக இருப்பதாக சிலர் விமர்சிக்கின்றனர். 

"என்ன கன்றாவி இது..?" என்று சமூக வலைத்தளங்களில் பலர் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். மதுப்பழக்கம் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் ஒரு பழக்கம் என்றும், அதனை ஊக்குவிக்கும் விதமாக பிரபல நடிகர் பேசுவது தவறான முன்னுதாரணம் என்றும் அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஸ்ரீகாந்த் ஆடை விஷயத்தில் நடிகையின் தனிப்பட்ட விருப்பம் முக்கியம் என்று பேசியதை சிலர் வரவேற்றாலும், மற்றொரு தரப்பினர் இதற்கு எதிர் கருத்துக்களை முன்வைக்கின்றனர். 

"ஒரு தயாரிப்பாளரோ இயக்குனரோ ஒரு குறிப்பிட்ட காட்சியில் இப்படியான ஆடை அணிந்து வந்தால் தான் சிறப்பாக இருக்கும் என நினைக்கும் பொழுது அதனை படத்தில் நடிக்கக்கூடிய நடிகை மறுத்தால் அங்கே பிரச்சினை தான் வரும்" என்று அவர்கள் வாதிடுகின்றனர்.

படங்களில் ஒப்பந்தம் செய்யும் போதே காட்சிகள் மற்றும் ஆடைகள் குறித்து நடிகைகளிடம் தெளிவுபடுத்தப்படுவதை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். "படத்தில் ஒப்பந்தம் செய்யும்போது இப்படியான காட்சிகள் இருக்கிறது, இப்படியான ஆடைகள் அணிய வேண்டும் என சொல்லிவிட்டு தான் ஒப்பந்தம் செய்கிறார்கள். 

அப்படி இருக்கும் பொழுது படப்பிடிப்பு தளத்தில் இந்த ஆடை எனக்கு பிடிக்கவில்லை என்று சொல்வது எப்படி சரியாக இருக்கும்?" என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ஒப்பந்தப்படி வேலை செய்ய வேண்டியது நடிகையின் கடமை என்றும், தனிப்பட்ட விருப்பம் பார்க்க முடியாது என்றும் சிலர் வாதிடுகின்றனர்.

ஸ்ரீகாந்த், நடிகை சாய் பல்லவியை உதாரணம் காட்டி பேசியதும் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. சாய் பல்லவி கவர்ச்சியான ஆடைகளை அணிய மாட்டார் என்பது அனைவரும் அறிந்த விஷயம். அதை சுட்டிக்காட்டி ஸ்ரீகாந்த் பேசியது  சாய் பல்லவியின் ரசிகர்கள் மத்தியில் மேலும் இந்த விவாதத்தை கொண்டு சென்று சேர்த்துள்ளது.

நடிகர் ஸ்ரீகாந்த் தனது சொந்த கருத்தை வெளிப்படையாக பேசியிருந்தாலும், அது தற்போது  சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாக மாறியுள்ளது. ஒரு பக்கம் ஸ்ரீகாந்தின் கருத்துக்கு ஆதரவும், மற்றொரு பக்கம் எதிர்ப்பும் கிளம்பி இருப்பதால், இந்த சர்ச்சை மேலும் சில நாட்களுக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது

LATEST News

Trending News