இந்த ஆணுறையில் இருக்கும் பிரச்சனை இது தான்.. நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஓப்பன் டாக்..!
ரகுல் ப்ரீத் சிங், கடந்த 2023 ஆம் ஆண்டு "சத்ரிவாலி" என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் அவர் ஆணுறை பரிசோதனை செய்யும் பெண்ணாக நடித்திருந்தது பெரும் பேசுபொருளானது.
இந்த கதாபாத்திரம் பல்வேறு சர்ச்சைகளையும் கிளப்பியது. "பணத்திற்காக இப்படியான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டுமா?" என்று நடிகை ரகுல் ப்ரீத் சிங்கை தனிப்பட்ட முறையிலும் இணையவாசிகள் கடுமையாக விமர்சித்தனர்.
விமர்சனங்கள் எழுந்த சமயத்தில், நடிகை ரகுல் ப்ரீத் சிங் தைரியமாக சில விஷயங்களை கூறி பதிலளித்தார். அவர் கூறியதாவது, "இன்று திருமணமானவர்கள், திருமணம் ஆகாதவர்கள் என பல தரப்பினரும் ஆணுறைகளை பயன்படுத்துகிறார்கள்.
இந்த ஆணுறை தான் சிறந்தது, இந்த ஆணுறையில் இருக்கும் பிரச்சனை என்ன என்பதை ஒரு நிறுவனம் எப்படி கண்டுபிடிக்கும்? அதனை பரிசோதிக்க வேண்டும் அல்லவா? அப்படி பரிசோதிக்கும் பெண்ணாக நான் நடித்திருந்தேன்.
இதில் என்ன சர்ச்சை இருக்கிறது? ஒரு பொருளை பரிசோதிக்காமல் அதில் இருக்கக்கூடிய குறைகளை எப்படி கண்டறிய முடியும்?" என்று தனது கதாபாத்திரத்தை நியாயப்படுத்தி தைரியமாக பதில் அளித்தார்.
ரகுல் ப்ரீத் சிங்கின் இந்த துணிச்சலான பதில் இணையத்தில் வைரலானது. இந்நிலையில், நடிகை ரகுல் ப்ரீத் சிங் சமீபத்தில் வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவர் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் என ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ரகுல் ப்ரீத் சிங், எப்போதும் தனது கருத்துக்களை வெளிப்படையாக பேச தயங்காதவர்
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், தனது ஸ்டைலிஷ் மற்றும் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது அவர் வெளியிட்டுள்ள இந்த கவர்ச்சி புகைப்படங்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து லைக்குகளை குவித்து வருகின்றன.
"சத்ரிவாலி" திரைப்படத்தில் ஆணுறை பரிசோதனை பெண்ணாக நடித்ததற்காக எழுந்த விமர்சனங்களுக்கு ரகுல் ப்ரீத் சிங் அளித்த துணிச்சலான பதிலும், தற்போது அவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்களும் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருவது குறிப்பிடத்தக்கது.