தனுஷின் இட்லி கடை ரிலீஸ் தள்ளிப்போனது.. லேட்டஸ்ட் அப்டேட்

தனுஷின் இட்லி கடை ரிலீஸ் தள்ளிப்போனது.. லேட்டஸ்ட் அப்டேட்

தனுஷ் 

நடிகர் தனுஷ் தற்போது நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும் பட்டையை கிளப்பி வருகிறார். இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள மூன்றாவது திரைப்படமான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம், வருகிற 21ம் தேதி வெளிவரவுள்ளது.

தனுஷின் இட்லி கடை ரிலீஸ் தள்ளிப்போனது.. லேட்டஸ்ட் அப்டேட் | Dhanush Idly Kadai Release Postponed

இதை தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் நான்காவது படம்தான் இட்லி கடை. தனுஷ் இயக்கி ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அருண் விஜய், நித்யா மேனன், சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

தள்ளிப்போன ரிலீஸ்

ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படம் வருகிற ஏப்ரல் 10ம் தேதி வெளிவரவிருந்த நிலையில், தற்போது தள்ளிப்போயுள்ளது. ஆம், ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவித்திருந்த நிலையில், தற்போது ஆகஸ்ட் மாதம் இப்படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருகிறார்களாம்.

 

தனுஷின் இட்லி கடை ரிலீஸ் தள்ளிப்போனது.. லேட்டஸ்ட் அப்டேட் | Dhanush Idly Kadai Release Postponed

படப்பிடிப்பு இன்னும் நிறைவடையாதது தான் இதற்கான காரணம் என சொல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து படக்குழு அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

LATEST News

Trending News