பட வாய்ப்புக்காக இப்படியுமா..? டூ பீஸ் நீச்சல் உடையில் வாணி போஜன்..!

பட வாய்ப்புக்காக இப்படியுமா..? டூ பீஸ் நீச்சல் உடையில் வாணி போஜன்..!

பட வாய்ப்புக்காக இப்படியுமா..? என்று ரசிகர்களை வாய் திறக்க வைத்திருக்கிறார் நடிகை வாணி போஜன். 

தொடக்கத்தில் விமான பணி பெண்ணாக பணியாற்றிக் கொண்டிருந்த நடிகை வாணி போஜன் தொடர்ந்து மாடலிங் துறையில் அடி எடுத்து வைத்தார். இதன் பயனாக, விளம்பர படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. 

விளம்பர படம் ஒன்றில் நடித்து கொண்டிருக்கும் போது அங்கு வந்த சீரியல் டைரக்டர் ஒருவர் நடிகை வாணி போஜனின் அழகை பார்த்து சீரியல் நடிகையாக நடிக்கிறீர்களா என்று கேட்டிருக்கிறார். 

அப்படி இவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் தெய்வமகள் சீரியல். தெய்வமகள் சீரியல் இவரை சின்னத்திரை லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்திற்கு சொந்தக்காரியாக்கும் அளவுக்கு கொண்டு சென்றது. 

தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த நடிகை வாணி போஜன் தற்போது வெற்றிகரமாக நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆனால், இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் சொல்லிக் கொள்ளும்படியான வரவேற்பை பெற தவறுகின்றன.

யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை. வாணி போஜனக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குறைந்து கொண்டே செல்கிறது. ஒரு பேட்டியில் பேசிய நடிகை வாணி போஜன், என்னை படத்தில் ஒப்பந்தம் செய்துவிட்டு படப்பிடிப்பு தளத்துக்கு சென்ற பிறகு இவர் சீரியல் நடிகை ஆச்சே.. சீரியல் நடிகையின் முகம் படத்தில் எதற்கு..? என்று என் காதுபடவே பேசி இருக்கிறார்கள். அதன் பிறகு என்னை அந்த படத்தில் இருந்து நீக்கியும் இருக்கிறார்கள். 

சீரியல் நடிகையாக இருந்தால் என்ன..? சினிமா நடிகையாக இருந்தால் என்ன..? எல்லாருமே ஆர்ட்டிஸ்ட் தானே என்று கேள்வி எழுப்பினார் நடிகை வாணி போஜன். 

இவர் தற்போது வெப் சீரிஸ் ஒன்றிலும் ஒப்பந்தமாகியுள்ளார். முதன்முறையாக இந்த வெப்சீரிஸில் டூ பீஸ் உடையில் சில நிமிட காட்சிகளில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

பட வாய்ப்பு குறைந்து விட்ட நிலையில் டூ பீஸ் நீச்சல் உடையில் நடிக்கவும் தயாராகி இருக்கிறார் நடிகை வாணி போஜன். இதனை அறிந்த ரசிகர்கள் பட வாய்ப்புக்காக இப்படியுமா..? என்று வாயை பிளந்து வருகின்றனர். 

ஏற்கனவே தன்னுடைய தோழிகளுடன் தீவு ஒன்றுக்கு சுற்றுலா சென்று இருந்த வாணி போஜன்.. டூ பீஸ் உடையில் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதன் ஒரு பகுதியாக தற்போது டூ பீஸ் நீச்சல் உடையில் நடிக்கவும் சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்று கூறுகிறார்கள். இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

LATEST News

Trending News