படுக்கை காட்சியில் நடிகர்களுக்கு அந்த உணர்வு தான் ஏற்படும்!! கூச்சமில்லாமல் பேசிய நடிகை தமன்னா..
தமிழில் கேடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி வியாபாரி, கல்லூரி போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை தமன்னா. அதன்பின் விஜய், சூர்யா, அஜித், விஷால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் இடத்தினை பிடித்தார்.
தெலுங்கு, தமிழ் படங்களில் பிஸியாக நடித்து வந்த தமன்னா, இந்தி பக்கம் சென்று அங்கு கவர்ச்சியில் உச்சக்கட்டத்தை காட்டி நடித்து வந்தார். சமீபத்தில் ஜெயிலர் படத்தில் காவாலா பாடலில் படுமோசமான அசைவுகளில் நடித்து இளசுகளை ஈர்த்தார். தற்போது பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் காதலில் இருப்பதாக அறிவித்து அவருடன் நெருக்கமாக எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.
பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் தமன்னா, சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 படத்தில் முக்கிய ரோலில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், நடிகர்களுடன் படுக்கையறை காட்சியில் நடிக்கும் போது நடிகர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்று வெளிப்படையாக பகிர்ந்துள்ளார் நடிகை தமன்னா.
அந்தரங்க காட்சிகளை நடிகர்கள் அதிகம் விரும்புவதில்லை என்றும் அதற்கு மாறாக நடிகையைவிட அவர்கள் தான் பதட்டமாகவும் சங்கமாகவும் இருப்பதை நான் பார்த்திருப்பதாகவும் தமன்னா தெரிவித்துள்ளார். பெண் நடிகை என்ன நினைப்பார்கள் என்று கவலைப்படுவார்கள் என்றும் இதெல்லாம் மிகவும் விசித்திரமாக இருக்கும், நடிகர்கள் மனதில் பல கேள்விகள் இருக்கும் என்றும் தமன்னா ஓப்பனாக பேசியிருக்கிறார்.